FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, August 26, 2011

பணி நிறைவு பாராட்டு விழா


இராமேஸ்வரம் தோழர் C.முத்துமுனியாண்டி
தமிழ் மாநில அமைப்புச் செயலாளர், FNTO
31-8-2011 அன்று இலாக்காப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெறுகிறது.

நாள்:        29-8-2011 திங்கள் மாலை 4 மணியளவில்
இடம்:      இராஜராஜேஸ்வரி கல்யாண மஹால்,
வர்த்தகன் தெரு, இராமேஸ்வரம்

வாழ்த்துவோர்
தோழர் D.சந்திரசேகரன்,
தமிழ் மாநிலச் செயலாளர், FNTO, சென்னை
தோழர் S.குருவன், மாநில துனைத் தலைவர், FNTO, காரைக்குடி
தோழர் TS.இன்னாசிமுத்து, மாவட்டத் தலைவர், FNTO/KKD
மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள்.
அனைவரும் வருக ! வருக !!

Friday, August 19, 2011

மெல்ல BSNL இனி வளரும் Broad Band-ஆல்... !


இந்தியா போஸ்ட் டெக்னாலஜியின் ஒரு பகுதியாக, 2012-13 –ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து அஞ்சலகங்களுக்கும் இண்டர்நெட் இணைப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இண்டர்நெட் பயன்பாடு என்பது அபரிமிதமாக விரிவடைந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், Broad Band சேவையின் வளர்ச்சி தான், நலிவடைந்து கொண்டிருக்கும்  BSNL-ஐ மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் நல் வாய்ப்பாகத் தெரிகிறது. ஆகவே, Broad Band இணைப்புகளின் எண்ணிக்கையை விரைந்து அதிகரிப்பதிலும், தரமான சேவையை அளிப்பதிலும் நமது முழுச் சக்தியையும் பயன்படுத்தி நாம் முனைப்போடு செயலாற்ற வேண்டும்.

”Broad Band என்றாலே BSNL தான்”
என்ற நிலை வரும் நாளே நமக்குப் பொன்னாள்.

நாக்கு – ஓர் உண்மை

நாக்கை எப்படி பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு மனிதனுக்கு மூன்று வருடம் ஆகிறது. ஆனால், அதை எங்கு, எப்போது பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கோ வாழ்நாள் முழுவதும் ஆகிவிடுகிறது.

நலிவடைந்த நிறுவனங்களின் ஓய்வு வயதை உயர்த்த பரிசீலனை


நலிவடைந்த நிறுவனங்களின் ஓய்வு வயதை உயர்த்த பரிசீலனை
            நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்கும் விதமாக, அந்தந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
            ஏற்கனவே 58 ஆக இருக்கும் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தும் திட்டமானது, BRPSE என்னும் நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைப்பதற்கான வாரியத்தின் ஆலோசனைப்படியே செயல்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
            புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சில நிறுவனங்களுடைய ஊழியர்களின் ஓய்வு வயது ஏற்கனவே 60 ஆக உயர்த்தப்பட்டுவிட்ட போதிலும், முடிவுகள் நிறுவனத்திற்கேற்ப எடுக்கப்படுமென்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
            இருந்தபோதிலும், BRPSE–ன் ஆலோசனைப்படி, நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களைப் புனரமைப்பதில் முக்கியப் பங்காற்றவிருக்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு சரியான கொள்கை வகுக்கப்படும்.

Move to raise retirement age in sick PSUs


Move to raise retirement age in sick PSUs
Press Trust of India
                As an initiative to nurse back sick PSUs to health, the Government is considering to enhance the retirement age of employees to 60, in companies for which revival schemes have been approved.
                At present, the superannuation age in sick PSUs is 58 years.
                The move to raise the retirement age is in line with the recommendations of the Board for Reconstruction of Sick Enterprises (BRPSE), sources said.
                While the Government has already increased the superannuation age in some of the companies on the revival path, the decisions were on case-to-case basis. “There were no set principles”, an official said.
                However, following the BRPSE suggestions to motivate the employees, who are going to play a critical role in the PSU’s revival, a proper policy will be formulated.
Courtesy: Business Line, 17-08-2011