அந்நாளில் தமிழ் மாநிலத்தில் FNPTO தொழிற்சங்கத்தை நிறுவுவதற்கு அரும்பாடுபட்டவர்களில் முன்னணியில் நின்றவர் தோழர் A.K. பல காலம் அவரது எலக்ட்ரிக்கல் செக்சன் தான் மாநிலச் சங்க அலுவலகமாக செயல்பட்டது. பின்னாளில், FNTO E-3 சங்கம் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்தபோது மாநிலச் செயலராகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி அனைத்து தரப்பினரிடமும் நன் மதிப்பினை பெற்றதன் வாயிலாக தொய்வின்றி சங்கத்தை வழிநடத்தினார். பணி ஓய்வுக்குப் பிறகும் சங்கப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த மூத்த தலைவர் A.K என்ற A.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்று (28.04.2020) அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்து சொல்லொண்ணாத் துயரமடைந்தோம். அவரது மறைவுக்கு நமது கொடிதாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம். தலைவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Sri A.K. @ A.Krishnamoorthy was one among the top founder leaders of
FNPTO movement in Tamil Nadu Circle. He was working as a Technical Supervisor
in TN Circle office at Anna Road, Chennai for a long time and his Electrical
Section was serving as the Circle union office till his retirement. He took
charge as the Circle Secretary of FNTO E-3 boldly at a time when the union
encountered a severe crisis at Organisational level in Tamil Nadu and worked so
efficiently to keep the rank and file in tact. He was involved in printing and
despatching the journal "Oli Alai" even after his retirement and he
never failed to attend any meeting or function of the union anywhere in spite
of his health condition. We were shocked to hear the sad news of his sudden
demise today morning. His loss is irreparable to the FNTO movement. We
dip our flag and salute his selfless spirit.