ஏற்கனவே பல மாதங்களாக சம்பளம் வராத நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவும் சேர்ந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நமது BSNL ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு காரைக்குடி FNTO சங்கத்தின் சார்பில் உதவி செய்ய முடிவெடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நமது தோழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு (overwhelming response) கிடைத்தது. தலா 1100/- ரூபாய் மதிப்பிலான சாப்பாட்டு அரிசி (10 kg) பை மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 16 பேருக்கும், அரிசிப் பை மட்டும் 2 பேருக்கும் என மொத்தம் 18 பேருக்கு வழங்கப்படது. காரைக்குடி சுப்பிரமணியபுரம் தொலைபேசி நிலையத்தில் 11/04/2020 காலை 11.00 மணியளவில் சமூக இடைவெளி பேணும் முகத்தான் மிக எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நமது FNTO மற்றும் BDPA(I) தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். இத்தகைய ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக பொருளுதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
14/04/2020 தமிழ் புத்தாண்டு தினத்தின் துவக்கமாக, காலையில், காரைக்குடி FNTO கிளையின் சார்பாக ஏற்கனவே நிவாரணம் வழங்கிய போது விடுபட்டுப்போன ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவருக்கு, தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப் பட்டது.
நமது சேவை தொடரும்...
No comments:
Post a Comment