FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, December 21, 2018

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 12000 கோடி கடன் வாங்கும் BSNL


சேவைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்து கொண்டே வருவதால், பராமரிப்புச் செலவுகளை சமாளிப்பதற்காக BSNL நிறுவனம் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட சில பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 12000 கோடி ரூபாய் கடன் வாங்குவதாகத் தெரிகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தொலைத்தொடர்புத் துறை (DOT) யின் அனுமதிக் கடிதம் (Letter of comfort) இல்லாமலேயே BSNL நிறுவனம் இந்த கடனை வாங்குகிறது. சாதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்கு அந்தந்த அமைச்சரகங்கள் (Nodal ministries) அனுமதிக் கடிதம் வழங்கும். ஆனால், BSNL நிறுவனத்துக்கு மேற்படி அனுமதிக் கடிதம் DOT-யால் வழங்கப் படாததால், வணிகரீதியிலான அதிகபட்ச வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு BSNL நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே BSNL-க்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய வகையில் 2400 கோடி ரூபாய் DOT-யிட மிருந்து வரவேண்டியுள்ளது. அந்தப் பணத்தை DOT கொடுத்தாலாவது, BSNL நிறுவனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியிலிருந்து தற்காலிகமாகவாவது மீண்டுவர வாய்ப்பு கிடைக்கும். அதற்கும் வழியில்லை.

கடந்த சில வருடங்களாக குறைந்துகொண்டே வந்த BSNL-ன் நட்டம், சென்ற நிதியாண்டில் (2017-18-ல்) அதற்கும் முந்தைய ஆண்டைவிட இருமடங்காக (7992 கோடியாக) அதிகரித்தது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.