2014-15-ம்
ஆண்டுக்கான போனஸ் 3000 ரூபாய் வழங்கப் படுமென BSNL நிர்வாகம் 07/10/2016 அன்றே உத்தரவு
வெளியிட்டுவிட்ட போதிலும், BSNL நிறுவனத்தின் நெருக்கடியான நிதிநிலையைக் கருத்தில்
கொண்டு போனஸை முற்றிலும் வேண்டாமென்றோ அல்லது மூன்றாவது ஊதியக்குழு அமலாக்கத்திற்குப்
பிறகு வாங்கிக்கொள்ளலாமென்றோ சொல்வதன் மூலம் போனஸைத் தியாகம் செய்ய ஊழியர்கள் முன்வரவேண்டுமென்று
Director(HR) 10/10/2016 அன்று விடுத்த வேண்டுகோள் (Appeal) ஊழியர்கள் மத்தியில் தேவையில்லாத
குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
எனவே,
FNTO, BSNLWRU, BSNLSU ஆகிய மூன்று சங்கங்களின் பொதுச் செயலாளர்களும் 19/10/2016 அன்று
கார்ப்பரேட் அலுவலகத்தில் GM(SR) அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி, போனஸ் பட்டுவாடாவை
விரைவுபடுத்தக் கோரினர்.
தற்போது,
21/10/2016 அன்று வெளியிடப்பட்ட உத்தரவில், போனஸை வேண்டாமென்று சொல்லும் ஊழியர்களும்,
மூன்றாவது ஊதியக்குழு அமலாக்கத்திற்குப் பிறகு வாங்கிக்கொள்ளலாமென்று நினைக்கும் ஊழியர்களும்
தங்களது விருப்பத்தை (option) 24/10/2016-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென BSNL நிர்வாகம்
கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகவே,
தீபாவளிக்கு முன்பு, அநேகமாக, அக்டோபர் மாத சம்பளத்துடன் சேர்த்து போனஸ் பட்டுவாடா
ஆகுமென எதிர்பார்க்கப் படுகிறது.