FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, August 30, 2014

Hon”ble MOC insists for change of mindset. But will we?

The Hon’ble Minister of Communications, Sri Ravishankar Prasad, insists on change of mindset to revive BSNL to its past glory in the recently held conference of circle heads. But the million dollars question is, will we? or rather will the officers majority of whom still now are interested in working in the opposite directions?  See the video.

http://youtu.be/zRrtP_CIquM

Sunday, August 17, 2014

வருந்துகிறோம்

மூத்த தோழியர் திருச்சி பத்மாவதி நடேசன் இன்று இயற்கை எய்தினார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். தனது சேவைக்காலம் முழுவதும் தொழிற்சங்கமே உயிராய் வாழ்ந்தவர். NFTEயில் இருந்த காலத்திலும் பின்னால் FNTOவில் இணைந்தபோதும் அவரால் சிறப்புப் பெறாத மாநாடுகள் இல்லை. எண்ணற்ற தோழியரை தொழிற்சங்க ஈடுபாடு கொள்ளவைத்து சிறப்பாகப் பணியாற்றவும் வைத்தவர். அவரது செயல்பாடுகள் உடன் இருந்தோரையெல்லாம் உத்வேகம் கொள்ள வைத்தவை. பணி ஓய்வுக்குப் பின் உடல்நலம் காரணமாகத் தொழிற்சங்கச் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி இருந்த போதிலும் தொழிற்சங்க உணர்வுகள் குன்றாமல் வாழ்ந்தவர். இது ஒரு பெரிய இழப்பு. ஆனால் அவர் மறைந்த பின்னும் வாழப்போகிறார். அவரது விருப்பப்படி அவர் உடல் திருச்சி மருத்துவக்கல்லூரிக்கு தானமாக அளிக்கப் பட்டுள்ளது. ஆக, அவர் உடல் உறுப்புகளில் பல பலரது உடல்களில் இடம்பெற்று பலருக்கு வாழ்வு அளிக்கப் போகிறார். உயிருடன் இருந்தபோது அவரால் பலவகையிலும் பலன்பெற்றவர்கள் எத்தனையோ பேர். இன்று உயிர் துறந்தும் அவரால் பலனடையப்போகிறவர்கள் எத்தனையோ பேர்.

Friday, August 15, 2014

Happy Independence Day Greetings - 15/08/2014




















அ னை வ ரு க் கு ம்   இ னி ய

68-ஆ வ து   சு த ந் தி ர   தி ன

ந ல் வா ழ் த் து க ள் 

2013-14-ம் ஆண்டுக்கான லாப நட்டக் கணக்கு – Profit and Loss Account

தமிழ் மாநிலத்தில் இயங்கி வரும் 17 தொலைத்தொடர்பு மாவட்டங்களின் 2013-14-ம் ஆண்டுக் கான லாப நட்டக் கணக்கு வெளியாகியுள்ளது. 17 மாவட்டங்களில் நாகர்கோவில், பாண்டிச்சேரி மற்றும் குன்னூர் ஆகிய 3 மாவட்டங்கள் மட்டுமே முறையே 21 கோடி, 15 கோடி மற்றும் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.

இதர 14 மாவட்டங்களில், குறைந்தபட்சமாக தூத்துக்குடி 4 கோடி ரூபாயும், அதிகபட்சமாக திருச்சி 75 கோடி ரூபாயும் நட்டத்தைச் சந்தித்துள்ளன. மதுரை மாவட்டம் 71 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளது.

காரைக்குடி மாவட்டத்தின் மொத்த வருவாய் 66 கோடி ரூபாய், ஆனால் செலவோ 91 கோடி ரூபாய், எனவே நிகர நட்டம் 25 கோடி ரூபாயாகும். கடந்த 2012-13-ம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த 2013-14-ம் ஆண்டில் 1½ கோடி ரூபாய் அளவுக்கு செலவு கூடியிருந்தாலும் 3½ கோடி ரூபாய் அளவுக்கு (Broad Band மூலமாக) வருவாய் உயர்ந்திருப்பதால், கடந்த ஆண்டில் 27 கோடியாக இருந்த நட்டம் இந்த ஆண்டு 25 கோடியாகக்  குறைந்துள்ளது.

மொத்தத்தில், தமிழ் மாநிலம் 430 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளது.

இப்படியே போனால் ................ ?

நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது !


காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ............ இது பழமொழி