FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, August 15, 2014

2013-14-ம் ஆண்டுக்கான லாப நட்டக் கணக்கு – Profit and Loss Account

தமிழ் மாநிலத்தில் இயங்கி வரும் 17 தொலைத்தொடர்பு மாவட்டங்களின் 2013-14-ம் ஆண்டுக் கான லாப நட்டக் கணக்கு வெளியாகியுள்ளது. 17 மாவட்டங்களில் நாகர்கோவில், பாண்டிச்சேரி மற்றும் குன்னூர் ஆகிய 3 மாவட்டங்கள் மட்டுமே முறையே 21 கோடி, 15 கோடி மற்றும் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.

இதர 14 மாவட்டங்களில், குறைந்தபட்சமாக தூத்துக்குடி 4 கோடி ரூபாயும், அதிகபட்சமாக திருச்சி 75 கோடி ரூபாயும் நட்டத்தைச் சந்தித்துள்ளன. மதுரை மாவட்டம் 71 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளது.

காரைக்குடி மாவட்டத்தின் மொத்த வருவாய் 66 கோடி ரூபாய், ஆனால் செலவோ 91 கோடி ரூபாய், எனவே நிகர நட்டம் 25 கோடி ரூபாயாகும். கடந்த 2012-13-ம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த 2013-14-ம் ஆண்டில் 1½ கோடி ரூபாய் அளவுக்கு செலவு கூடியிருந்தாலும் 3½ கோடி ரூபாய் அளவுக்கு (Broad Band மூலமாக) வருவாய் உயர்ந்திருப்பதால், கடந்த ஆண்டில் 27 கோடியாக இருந்த நட்டம் இந்த ஆண்டு 25 கோடியாகக்  குறைந்துள்ளது.

மொத்தத்தில், தமிழ் மாநிலம் 430 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளது.

இப்படியே போனால் ................ ?

நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது !


காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ............ இது பழமொழி

No comments:

Post a Comment