மார்ச் 2013 “ஒலிக்கதிர்” இதழில் “கோயபல்ஸ் பிரசாரம்” என்ற தலைப்பில் 1970களில் தோழர் குப்தா இரு கட்ட பதவி உயர்வு கோரிக்கையை முன்வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் மேற்படி திட்டத்தை முன்வைத்தது FNPTOவின் தானைத் தலைவர் தோழர் கே. ராமமூர்த்தி என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்.
தோழர் கே.ஆர். அவர்களால் தபால் தந்தி ஊழியர் அனைவருக்கும் குறைந்த பட்சம் இரண்டு பதவி உயர்வுகள் வேண்டுமென்று 3ஆம் ஊதியக் குழு முன் 1970ல் கோரிக்கை வைக்கப் பட்டது. மாறாக NFPTE சம்மேளனம் 35 ஆண்டு கால ஊதிய விகிதம் வேண்டுமென்றும், 10 ஆண்டுகளுக்குப்பின் திறமைத் தேர்வு (proficiency exam)மூலம் 3 இன்க்ரிமெண்டும், அடுத்த 10 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தேர்வு நடத்தி மேலும் 3 இன்கிரிமெண்ட் தரவேண்டுமென்றும் கூறியிருந்தார். இதற்கு மாற்றாக 3 குறுகிய ஊதிய விகிதங்கள் தரலாம் என்றும் கோரியிருந்தார்.
இந்தத் தகவலை மூன்றாம் ஊதியக்குழு அறிக்கையில் 164ம் பத்தியில் காணலாம். இரு கட்டப் பதவி உயர்வு என்பது ஊழியருக்கு உடனடி பலன் அளிக்கக் கூடியது என்ற தோழர் கே.ஆர் அவர்களின் வாதங்களின் பலனாகவே அதை தோழர் குப்தாவும் ஏற்றுக்கொண்டு, தேசிய கவுன்ஸிலில் இந்தக் கோரிக்கை விவாதிக்கப் பட்டது. இரு சம்மேளனங்களும் இணைந்து விவாதித்து NFPTEயின் கே.ஜி. போஸ் அணியினரின் எதிர்ப்பையும் மீறி OTBP/BCR திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. இதுவே மற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்மாதிரியாக அமைந்து ACP என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டது.
2000 செப்டம்பரில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் FNTO/BMS கலந்து கொள்ளவில்லை என்று மேலும் ஒரு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. மேற்படி வேலை நிறுத்தத்தில் NFTE FNTO BTEF சம்மேளனங்கள் கூட்டாக வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தன. FNTO NFTE சம்மேளனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மூன்று நாட்கள் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தன. ஆனால் BTEF சம்மேளனம் முதல் நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டு பின்னர் அரசியல் காரணங்களுக்காக வாபஸ் பெற்றது. NFTEயில் அன்றிருந்த AITEU (நம்பூதிரி அணி)தான் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை . “ஒலிக்கதிர்” மாற்றான் சாதனைகளைத் தன் சாதனைகளாகப் பறை சாற்றுவது வேடிக்கைதான். மிகச் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளைக்கூடத் தவறாகச் சித்தரிக்கும் “ஒலிக்கதிர்” தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். தவறுகள் திருத்தப் படும் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment