நேற்று நிதி நெருக்கடியைக் காரணம்
காட்டி போனஸ் நிறுத்தப் பட்டது.
இன்று அதே
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மெடிக்கல் அலவன்ஸ், All India LTC மற்றும் EL Encashment போன்ற சலுகைகள் நிறுத்தப் பட்டுள்ளன.
நாளை இதே
நிதி நெருக்கடி தொடர்ந்தால் என்னவாகும் ? இதர படிகளும் படிப்படியாக நிறுத்தப்படும்
அபாயம் கண்ணெதிரே தோன்றுகிறது.
தொழிலாளர்களை ஊக்குவித்து, வருவாயைப் பெருக்குவதிலும் வராக்கடன்களை வசூலிப்பதிலும்
முனைப்போடு செயலாற்றி BSNL நிறுவனத்தின் நிதிநிலையைச் சீராக்குவதற்கு மாறாக, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் வயிற்றிலடிக்க எத்தனிக்கும்
நிர்வாகத்தின் தவறான போக்கைக் கண்டித்து, 13-9-2011 அன்று அகில இந்திய அளவில் FNTO
–வின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment