ஊழல் அதிகாரிகளின் ஊதாரித்தனமான செலவுகளைக் குறைக்க வக்கற்ற நிர்வாகம், ஊழியர்களுக்குக் கிடைக்கின்ற சிறிய சலுகைகளையும், எழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டு ஊழியர்கள் அனுபவித்து வரும் ஊழியர் நலத்திட்டங்களிலும், சிக்கன நடவடிக்கை என்று கைவைப்பதைக் கண்டித்து ஆர்ப்பரிக்க, அதன்மூலம் ஊழியர்களின் கொந்தளிப்பை நிர்வாகத்துக்கு உணர்த்திட, நமது தேசிய சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று நாடெங்கும் செப்டம்பர் 13ம் நாள் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஊழியர்கள் பெருந்திரளாய்க் கலந்துகொண்டு நிர்வாகம் பிறப்பித்துள்ள அநியாய உத்தரவுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரியப் படுத்தியுள்ளனர். தமிழ் மாநில சங்கம் சென்னை தொலைபேசி மாநில சங்கங்கள் இணைந்து சென்னையில் அண்ணா சாலை தமிழ்மாநிலப் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் NFTE தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாநில தலைவர் திரு இராதாகிருஷ்ணனும், தமிழ்மாநிலத் துணைத் தலைவர் திரு பார்த்தசாரதியும் கூட்டுத் தலைமை ஏற்றனர். சம்மேளன துணைச் செயலரும், சென்னை மாநிலச் செயலருமான திரு லிங்கமூர்த்தி, தமிழ்மாநிலச் செயலர் திரு சந்திரசேகரன், தமிழ்மாநிலப் பொருளாளர் திரு சாய்ராம், NFTE மாநிலச் செயலர் திரு பட்டாபி, BSNL DEU leader திரு குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். சென்னை மாநில கௌரவத் தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment