FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, March 22, 2011

பரமக்குடி கோட்டப் பொறியாளரின் பந்தாட்டம்

ஏற்கனவே, இண்டோருக்கு ஆள் பற்றாக்குறை என்று சொல்லி அவுட்டோரில் ஜுனியர்மோஸ்ட் என்ற பெயரில் தோழர் P.இராஜேந்திரன் அவர்களை இண்டோருக்கு மாற்றிய நிர்வாகம், பிறகு CSC-க்கு ஆள் கட்டாயம் தேவையென்று அதே தோழர் P.இராஜேந்திரன் அவர்களை அதே ஜுனியர்மோஸ்ட் என்ற பெயரில் மீண்டும் இண்டோரிலிருந்து CSC-க்கு மாற்றியது. நாம் கேட்டபோது, அன்றைய கோட்டப் பொறியாளர் இண்டோருக்கு ஆள் தேவையில்லையென்று உறுதிபடச் சொன்னார். ஆனால், இன்றைய கோட்டப் பொறியாளரோ இண்டோருக்குத்தான் கட்டாயம் ஆள் தேவையென்றும், CSC-க்கு தற்போது ஆள் தேவையில்லையென்றும் சொல்லி, அதே தோழர் P.இராஜேந்திரன் அவர்களை அதே ஜுனியர்மோஸ்ட் என்ற பெயரில் CSC-யிலிருந்து இண்டோருக்கு மாற்றி இருக்கிறார்.


நமது கேள்விகள்:

1. பரமக்குடியில் பாதிக்குமேல் போன் கனெக்ஷன் குறைந்துவிட்ட நிலையில், அவுட்டோர் செக்ஷனில் ஆட்கள் உபரியென நிர்வாகம் சொல்கிறது.உரிய விதத்தில் உபரிகளை ஆராய்ந்து உள்ளே போடுவதைத் தடுக்கும் சக்தி எது ?

2. அவுட்டோரிலிருந்து இண்டோருக்கு இருவர் ஆப்ஷன் கொடுத்தும் போட மறுப்பது ஏன் ?

3. மூன்றாவதாக, தோழர் V.கிருஷ்ணமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக, அவுட்டோரில் இருந்து இண்டோருக்குப் போக விருப்பம் கொடுத்தும் போட மறுப்பது ஏன் ? தோழர் P.இராஜேந்திரன் தான் போகவேண்டுமென்று கட்டாயப் படுத்துவது ஏன் ?

4. CSC-யை Strengthen பண்ண வேண்டுமென்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய்கிழியப் பேசும் அதிகாரிகள், பரமக்குடி என்றதும் பச்சோந்தி போல நிறம் மாறி மாறிப் பேசுவது ஏன் ? நல்ல சர்வீஸ் தருபவர்களைக் கெடுப்பது ஏன் ?

5. அப்படியே, CSC-யில் ஆட்குறைப்பு செய்தே ஆகவேண்டுமென்றாலும் கூட, நீண்டகாலம் பணிசெய்து களைத்தவர்களை எடுப்பதை விடுத்து, ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல, தோழர் P.இராஜேந்திரன் அவர்களை மட்டும் மீண்டும் மீண்டும் பந்தாடுவது ஏன் ? யாரைத் திருப்திப் படுத்த ?

ஏன் ? ஏன் ? ஏன் ? மேற்கண்ட நமது நியாயமான கேள்விகளுக்கு இருவாரங்களாகியும் இன்னும் விடை கிடைத்தபாடில்லை. நமது நியாயங்களை ஏற்க மறுக்கும் – ஹிட்லரைப் போல எதேச்சாதிகாரமாக, மனிதாபிமானமே இல்லாமல், தான்தோன்றித்தனமாக நடக்கும் - பரமக்குடி கோட்டப் பொறியாளர். அவரடிக்கும் கொட்டத்தைத் தட்டிக் கேட்கத் திராணியற்ற, தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மேல் மட்ட அதிகாரிகள்.

இனியும் பொறுப்பதற்கில்லை ! எதேச்சாதிகாரத்தை உடைத்தெறிய, மாவட்டம் முழுவதிலுமிருந்து திரண்டு வந்து பரமக்குடியில், வீறுகொண்டு போராடத் தயாராவோம் தோழர்களே !

1 comment:

  1. va pongi ezzhu thozaa... enna veeram oun veeram... by the by are you "pilliyar koil aandi". sippu varudu... fnto zindabad

    ReplyDelete