தமிழ் மாநில தேசிய சங்கத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் NUBSNLW LS & GR D தமிழ் மாநில சங்கத்தின் செயலர், தமிழ் மாநிலத்திலே ஒன்றுபட்ட FNPTOவின் போர்வாள் எனத் திகழ்ந்த நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அருமைத் தலைவர் திரு ஏ.எஸ். சையது அலி அவர்கள் இன்று (05-02-2015) மதுரையில் இயற்கை எய்தினார் . அவரது பிரிவு நம் இயக்கத்திற்கு மிகப் பெரிய பேரிழப்பு. 1973ல் அவர் தலைமையில் நடந்த ஈரோட்டுப் போராட்டம் என்றென்றும் அவர் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கும். தலைவரது மறைவுக்கு தமிழ் மாநில சங்கத்தின் சார்பிலும் அகில இந்திய சங்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதிச் சடங்குகள் 6-2-2015 காலை 10 மணி அளவில் மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெறுகிறது.