FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, May 20, 2014

கண்ணீர் அஞ்சலி

FNTO-வின் முன்னாள் பொதுச் செயலாளரும் இந்நாள் புரவலருமான தோழர் K.வள்ளிநாயகம் அவர்களுடைய தாயார் திருமதி K.முத்தம்மாள் இன்று (20/05/2014) காலை சுமார் 9.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம். அம்மையாரின் நல்லடக்கம் நாளை (21/05/2014) காலை சுமார் 10.00 மணியளவில் சென்னை, பெரம்பூரில் நடைபெறும்.

அன்னையை இழந்து வாடும் தோழர் K.வள்ளிநாயகம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, May 5, 2014

சம்பள நிர்ணய முரண்பாடு - FNTO கடிதம் : FNTO takes up the Pay fixation anomoly case

1-10-2000-க்கு முன்பு பதவி உயர்வு பெற்று 1-10-2000-க்கு பிறகு வரக்கூடிய இன்கிரிமெண்ட் தேதியில் சம்பள நிர்ணயம் செய்ய ஆப்சன் கொடுத்த ஊழியர்களுக்கு பாதகமான உத்தரவு DOT-யால் வெளியிடப்பட்டுள்ள சூழ்நிலையில்  இத்தகைய முரண்பாடான  உத்தரவை எதிர்த்து  FNTO கடிதம் கொடுத்துள்ளது.


































Thursday, May 1, 2014

மே தின வாழ்த்துகள் - May Day Greetings

மே 1 – தொழிலாளர் தினம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்வீணில்
உண்டு களித்து இருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் இறைத்து மாயமாட்டோம்வெறும்
வீணருக்கு உழைத்திங்கு உடலம் ஓயமாட்டோம்
-      மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
---------------------------------------------------------------------------------

இரத்தத்தையே வியர்வையாகச் சிந்தி உழைத்த ஊழியர்களால்
உருவாக்கப்பட்டு உயர்ந்தோங்கிய BSNL என்னும் ஆலமரம் - இன்று
சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில்
ஒருபக்கம் BSNL தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டியும்
மறுபக்கம் BSNL நிறுவனத்தின் நிதியைச் சுரண்டியும் கொழிக்கும்
ஊழல் அ(ச)திகாரிகளின் முகத்திரையைக் கிழிப்போம் !
BSNL-ஐக் காப்போம், வாடிக்கையாளர்களை மகிழ்விப்போம் போன்ற
வெற்றுக் கோஷங்கள் மட்டுமே கவைக்குதவாதென உணர்வோம் !
உண்மையிலேயே BSNL வளர்ச்சிபெற வேண்டுமென்றால்
BSNL-ன் நிதியாதாரம் பெருக்கப்பட வேண்டுமென்றால் – நாம்
ஒவ்வொருவரும் இன்னும் கடுமையாக உழைப்போம் என
இந்த மேதினத்தில் நாமனைவரும் சபதமேற்போம் !

---------------------------------------------------------------------------------
Do your duty and claim your rights.
கடமையைச் செய், உரிமையைக் கேள்.
-      இது FNTO-வின் தாரக மந்திரம்
---------------------------------------------------------------------------------
அனைவருக்கும்
மே தின வாழ்த்துகள்