ஏமாற்றாதே! ஏமாறாதே!!
78.2% IDA இணைப்பு FNTO-NFTE சங்கங்களால்தான் கிடைக்கவில்லை என்பது போல் இப்போது BSNLEU ஒலமிடுகின்றது. உண்மையில் அதற்கு காரணம் யார் என்பதை BSNL ஊழியர்கள் அனைவரும் அறிவர்.
01.01.2007 முதல் ஊதிய மாற்றம் செய்ய அன்றைய Sr. DDG (Estt) திரு. S.C.மிஸ்ரா, தலைமையிலான ஒரு குழுவை நிர்வாகம் 19.12.2006 அன்றே நியமித்தது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட BSNLEU சங்கமோ இதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பது யாவரும் அறிந்ததே. கோரிக்கை மனுவைக் கொடுப்பதற்கே 3½ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. மேலும் 1½ஆண்டுகள் ஐந்து ஆண்டு ஒப்பந்தம் தான் வேண்டும் என்று அடம்பிடித்தே காலதாமதம் செய்தது. BSNL ஊழியர்கள் அரசு பென்சன் பெறுவதால் ஐந்து ஆண்டு ஒப்பந்தம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் காலம் கடத்தியது ஏன்?
BSNL -ல் பத்து ஆண்டு ஒப்பந்தம் போடுவதால் மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் பத்து ஆண்டு ஒப்பந்தத்தை வற்புறுத்தும் என்றும் அதனால் அந்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நினைத்துக் கொண்டு தமது அரசியல் மேலிடத்தின் கட்டளையை சிரமேற்கொண்டு தான் காலம் கடத்தப்பட்டது. BSNL நிர்வாகம் குறிப்பாக HRD இந்த காலதாமத்தை ஊழியர்களின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை யென்றால் மேலும் சில ஆண்டுகள் தள்ளிப் போயிருக்கும். நிறுவனம் நாளுக்கு நாள் பெறும் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஊழியர்களுக்கு DPEவழிகாட்டுதல்களின்படி ஊதிய மாற்றமே கேள்விக்குறியாகி இருக்கும். ஆக தோழர் நம்பூதிரி சங்கத்தின் பொறுப்பற்ற போக்கின் காரணமாக BSNL ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பது போல் அலவன்சுகளில் மாற்றம் இல்லை யென்றாலும் சம்பளமாவது கிடைத்ததே என்று என்று BSNL ஊழியர்கள் சந்தோஷப்பட வேண்டியது தான்.
NFTE-FNTO சங்கங்கள் 68.8% IDAவை இணைப்பது பற்றிய கருத்து எதுவும் கூறவில்லை என்பதை உணரவேண்டும். Fixation Weightage அதிகாரிகளுக்கு கொடுத்ததுபோல் 30%என்பதைத்தான் ஏற்றுக் கொள்ளலாம் என்றனர். ஊதிய ஒப்பந்தத்தில் எந்த ஒரு அம்சத்தையும், விவாதிக்காமலும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமலும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமும் அதன் தோழமைச் சங்கங்களும் கையொப்பமிட்டதால் ஊழியர்கள் பெறுமளவு இழக்க நேரிட்டது. இன்றும் கூட அலவன்சுகளைப் பெறமுடியவில்லை. மாறக இருந்த அலவன்சுகளையும் இழந்து நிற்கின்றோம். அவை என்ன வென்பதை பட்டியலிட வேண்டியதில்லை. அனைத்து ஊழியர்களும் நன்கு அறிவர்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.14,000/=கேட்டுவிட்டு ரூ.7760/-க்கு தயக்கமின்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதை நினைக்கும் போது பாபு தாரபாதா அவர்கள் கூறியது தான் நினைவுக்கு வருகிறது. தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல- நிர்வாகம் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள என்று அவர் சூளுரைத்ததை மறந்து நிர்வாகம் கொடுத்ததை அப்படியே தண்டனிட்டு பெற்றுக் கொண்டு வந்த பெருமை BSNLEU -வையேசாரும். 'ஆடமாட்டாத நர்த்தகி-மேடைகோணல் என்று சொன்னாளாம்' என்ற பழமொழியும் நமக்கு நினைவுக்கு வருகிறது.
68.8% IDA இணைப்புக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு விட்டு, பின்னர் அன்றைய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் தந்த வாய்ப்புக்களையும் வேண்டுமென்றே நழுவவிட்டு தேர்தலின்போது, இப்பிரச்சனையில் அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் BSNLEU சங்கம் ஊழியர் விரோத சங்கம் என்பதை BSNL ஊழியர்கள் உணர்ந்து கொண்டு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று நம்புகிறோம்.
தமிழ்மாநில சங்கம்
No comments:
Post a Comment