FNTO-வின் போராட்ட அறைகூவல்
06-06-2012 : தர்ணா போராட்டம்
13-06-2012
: ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்கோரிக்கைகள்
1.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சிரமமும், நிர்வாகத்துக்கு அதிகபட்ச
நன்மையும் அளிக்கக் கூடிய வகையில் “மாற்றல் கொள்கை”யைத் திருத்தியமைத்தல்.
2.
அனைத்து கேடர்களும் பயன்பெறும் வகையில் பதவியுயர்வுத் திட்டத்தை
(NEPP) மாற்றியமைத்தல்.
3.
DPE வழிகாட்டுதல்படி 1-1-2007 முதல் 78.2% அகவிலைப் படியை இணைத்து
ஊதியத்தைத் திருத்தியமைத்தல். தொடர்ந்து, இதர படிகளையும் மாற்றியமைத்தல்.
4.
அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி Sr.TOA-களுக்கு EDP திட்டத்தை
அமல்படுத்தல்.
5.
DOT/DOPT அறிவுரைப்படி Senior Accountant-களுக்கு 2-வது ACP
திரும்பக் கொடுத்தல்.
6.
ஆறாவது ஊதியக்குழுவில் Postman-களுக்கு உயர் ஊதியம் வழங்கப்
பட்டதைத் தொடர்ந்து, Lineman-களுக்கும் Postman-களுக்கு இணையாக ஊதியத்தை மாற்றியமைத்து,
Telecom. Mechanic-களுக்கு உயர் ஊதியம் வழங்கல்.
7.
NEPP பதவியுயர்வுத்
திட்டத்தில் TTA-களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைதல். அதாவது, 1-10-2000 முதல் TTA-களுக்கு வழங்கப்பட்ட
உயர் ஊதிய மாற்றத்தை NEPP திட்டத்தின் கீழ் முதல் பதவியுயர்வாகக் கருதக் கூறும் உத்தரவை
ரத்து செய்தல்.
8.
2007-க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட TTA-களுக்கும் அதிகாரிகளுக்கு
இணையாக 30% ஊதிய நிர்ணயப் பலன்களைத் தருதல்.
9.
முதல் ஊதிய மாற்றத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை (Pay anomaly)
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி FR-ல் உள்ள விதிகளின் அடிப்படையில் களைதல்.
10.
இரண்டாவது ஊதிய மாற்றத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை (Pay
anomaly) களைய, ஆண்டு ஊதிய உயர்வை முன்தேதியிட்டு (stepping up) வழங்குதல்.
11.
2007-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் 78.2% அகவிலைப் படியை
இணைத்து ஓய்வூதியத்தைத் திருத்தியமைத்தல்.
12.
கருணை அடிப்படை நியமனங்களுக்கான அதிகாரத்தை மீண்டும் CGM-களுக்கு
வழங்கல்.
13.
Sr.TOA மற்றும் TTA-க்கள் பதவியுயர்வு பெற JTO போட்டித் தேர்வை
உடனே நடத்துதல்.
14.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து Telecom. Mechanic-களும்
TTA 40% தேர்வு எழுத அனுமதித்தல்.
15.
Telecom. Mechanic காலிப் பணியிடங்களில் RM மற்றும் GR-D-களை
நியமித்தல்.
16.
செயல்திறனை அதிகரிக்கும் விதத்திலும் ஊழலைத் தடுக்கும் விதத்திலும்,
பராமரிப்புப் பணிகளுக்கு காண்ட்ராக்ட் முறையை ஒழித்துவிட்டு, ACE-3 பில் முறையை மீண்டும்
செயல்படுத்துதல்.
17.
முன்தேதியிட்டு NE-12 ஊதிய விகிதத்துக்கு உடனடியாக உத்தரவு வெளியிடுதல்.
18.
சிவில் பகுதி ஊழியர்களுக்கு ஆளெடுப்பு விதிகளை மாற்றி,
கேடர் சீரமைப்பை அமல்படுத்தல்.
19.
VRS திட்டத்தைக் கட்டாயமாக்காமல், பயனளிக்கும் வகையில் பேசித்
தீர்த்தல்.
20.
Medical Allowance, Leave Encashment, LTC ஆகியவற்றை மீண்டும்
வழங்கல்.
21.
GSM, தொலைபேசிக் கருவிகள், மோடம், கேபிள், OFC மற்றும் பராமரிப்புப்
பணிகளுக்குத் தேவையான இதர உபகரணங்களையும் தாமதமின்றிக் கொள்முதல் செய்தல்.
22.
தேசியச் சங்கத்துக்கு அங்கீகாரம் / குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகளை
வழங்குதல்.
Nanru
ReplyDeleteplease visit my blog and comment
infobook22.blogspot.com