FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, May 1, 2012

மே – 1 : உழைப்பாளர் தினம்


உழைப்பின் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாகவும் மே தினம் உலகமெங்கும் கொண்டாடப் படுகிறது. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்களே தொழிலாளர் தினம் கொண்டாடப் படுவதற்கான அடிப்படையாக அமைந்த.

தொழிலாளர் தினமானது, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மே மாதத்தின் முதல் திங்கள்கிழமையும் வேறு சில நாடுகளில் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமையும் கொண்டாடப் பட்டாலும், பெரும்பாலான நாடுகளில் மே மாதத்தின் முதல் நாளன்றே கொண்டாடப் படுகிறது. இந்தியாவில் சென்னையில் தான் முதன்முதலில் 1923-ல் மெரீனா கடற்கரையில் தொழிலாளர் தினம் கொண்டாடப் பட்டது. அதன் நினைவாகவே சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலை நிறுவப் பட்டுள்ளது.

போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாகத் தொழிலாளர்கள் இழந்துவரும் இன்றைய சூழலில், அவற்றை வென்றெடுப்பதற்கான உரிமக்குரல் இன்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

கடமையைச் செய்வோம்!      உரிமைக்காகப் போராடுவோம்!!

அனைத்துத் தொழிலாளர்களுக்கும்
   தொழிலாளர் தின நல் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment