FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, February 6, 2010

செய்திச் சிதறல்

BSNLன் நிதிநிலையைச் சீராக்க அமைக்கப் பட்டுள்ள திரு சாம் பிட்ரோடா தலைமையிலான கமிட்டியையே, 93 மில்லியன் GSM இணைப்புகள் கொடுப்பதற்கான டெண்டர்கள் விஷயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதிலும் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து பரிந்துரைக்க பிரதம மந்திரி அலுவலகம் நியமித்துள்ளது.
பாராட்டுவோம்

 நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாநிலம் என பலர் நினைக்கும் பீஹார் மாநிலம் GSM இணைப்புகள் கொடுப்பதில் சாதனை நிகழ்த்தியுள்ளது. அம்மாநிலத்தில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் ஏர்டெல்லுக்கும் நமக்கும் 3300 இணைப்புகளே வித்தியாசமாம். அம்மாநிலத்தின் தலைமைப் பொது மேலாளர் திரு மிஸ்ராவும், அவர் தலைமையில் துடிப்பாகச் செயல்படும் நமது ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள். முனைப்பு இருந்தால், தக்க வழிகாட்டும் அதிகாரிகள் இருந்தால் மற்ற மாநிலங்களிலும் இது சாத்தியமே.


Friday, February 5, 2010

லேண்ட் லைனிலும் நமக்கு வேட்டு வைக்கிறார்கள்

ஏற்கனவே, மொபைல் சேவையில், உயர் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு, நிர்வாக முடிவுகளை  எடுப்பதில்  அநியாய தாமதம் ஆகிய பல காரணங்களால் உள்ளதிலேயே கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இப்போது லேண்ட் லைனுக்கும் ஆபத்து வந்து விட்டது. தினமும் ஆயிரக் கணக்கில் லேண்ட் லைன் சந்தாதாரர்களை இழந்து வரும் BSNLல் இன்னும் நீடித்து வரும் மற்ற சந்தாதாரர்களையும் தங்கள் பக்கம் இழுக்க தனியார் நிறுவனங்கள் செயல்படத் துவங்கியுள்ளன. அதில் ஒரு நடவடிக்கையாக, ஏர்டெல் நிறுவனம் , காதலர் தினத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்கள் (Airtell fixed  line to Airtell fixed line) வரும் பிப்ரவரி 7, 14,21 ஆகிய மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் பேசும் லோகல், எஸ் டீ டி அழைப்புகள் அனைத்தும் இலவசம் (எவ்வளவு நேரம் பேசினாலும்) என்று அறிவித்துள்ளது. 

Tuesday, February 2, 2010

ஒலி அலை

அக்டோபர் -- டிசம்பர் 2009 ஒலிஅலை இங்கு உள்ளது. புத்தகத்தைப் பக்கங்களைப் புரட்டிப் படிப்பதுபோல் படிக்கலாம். ஏதாவது ஒரு மூலையில் மவுஸால் இழுத்தால் பக்கம் புரளும். அது சிரமமாக இருந்தால் அம்புக்குறியை சொடுக்கியும் பக்கம் பக்கமாகப் படிக்கலாம். யாருக்காவது "ஒலி அலை" கிடைப்பதில் சிரமம் அல்லது தாமதம் ஏற்படலாம் என்பதால் இங்கு ஒலி அலை இவ்வடிவில்.

olialai

புதிய ஊதியம் எப்போது கிடைக்கும்?

Queries Column:

Q. When the wage revision will get implemented?

A. The recommendations of the wage revision committee have to be formalized as bilateral agreement by BSNL. Then it has to go to board. After clearance by the BSNL board, agreement has to get the approval of DOT and DPE. In our opinion it might take another 2 months and perhaps the revised pay may be drawn in April 2010.

K. Vallinayagam
GS FNTO.
ஊதிய உயர்வு கமிட்டியின் பரிந்துரைகள் இருதரப்பு ஒப்பந்தமாக முறைப்படியான ஒப்பந்த வடிவில் கையெழுத்தாக வேண்டும். அதன்பின் BSNL Boardக்கு அனுப்பப் பட்டு அங்கு ஏற்கப்பட்டு, அதன்பின் DOT மற்றும் DPEக்கு அனுப்பப் படவேண்டும். அவைகள் ஒப்புதல் அளிக்கவேண்டும். இதற்கு இரண்டு மாதங்களாகலாம். அனேகமாக ஏப்ரல் 2010ல் புதிய ஊதியம் வழங்கப் படலாம்.  
K.வள்ளிநாயகம்,
பொதுச்செயலர்.

From www.fnto.org

Monday, February 1, 2010

சேலம் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்

சேலத்தில் 24, 25 ஜனவரியில் நடைபெற்ற தமிழ்மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
  1. அங்கீகரிக்கப்பட்ட CITU சார்ந்த தொழிற்சங்கத்தோடு 15-01-2010 அன்று போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் 12,500/- என நிர்ணயிக்கப்பட்டு ஊதியங்களை மாற்ற வேண்டும். 1-1-2007 முதல் பெறும் கிராக்கிப்படி 78.2% சம்பளத்தோடு இணைக்கப்பட்டு புதிய சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.
  2. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அனைத்து அலவன்ஸ்களும் BSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அலவன்ஸ்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல் பாரபட்சமின்றி 27-2-2009 முதல் அமல்படுத்தப்பட வேண்டும்.
  3. ஏற்கனவே அமைச்சர் முன்னிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 5 கட்டப் பதவி உயர்வு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல எவ்வித பாரபட்சமுமின்றி ஊழியர்களுக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  4. கடந்த பத்தாண்டுகளாக டெபுடேசனில் இருக்கும் ITS உள்ளிட்ட குரூப்-A அதிகாரிகளின் இரட்டை நிலை நீக்கப்பட்டு உடனடியாக BSNL கம்பெனியில் அவர்களது நிலை இறுதி செய்யப்பட வேண்டும். ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட வேண்டும்.
  5. 93 மில்லியன் GSM மொபைல் கருவிகள் வாங்குவதற்கான தடைகள் நீக்கப்பட்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு உடனடியாக “பர்சேஸ் ஆர்டர்” வழங்கப்பட வேண்டும்.
  6. BSNL ஒரு சேவை நிறுவனம் என்பதாலும், கடுமையான போட்டிகளுக்கு இடையே செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதாலும், BSNL அரசுக்குச் செலுத்த வேண்டிய “லைசென்ஸ் கட்டணம்” ரத்து செய்யப்பட வேண்டும்.
  7. பங்கு விற்பனை விஷயத்தில் அரசு தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்வதைத் தவிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களையும் கலந்து ஆலோசித்து அதன்பிறகே இறுதி முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  8. “குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள்” அனைத்து சங்கங்களுக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.