FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, April 19, 2013

எச்சரிக்கை அறிவிப்பு


நடந்து முடிந்த தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில், FNTO உறுப்பினர்களின் வீடுகளுக்கெல்லாம் சென்று FNTO-வின் உறுப்பினர்களையே FNTO-வுக்கு எதிராக வாக்களிக்குமாறு வற்புறுத்தியதன் மூலம் தான் உறுப்பினராகவுள்ள சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்டு, FNTO-வின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட தோழர் P.செல்லப்பா, TTA/காரைக்குடி FNTO-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார் என்பதை இதன்மூலம் அறிவிக்கலாகிறது.
மாவட்டச் செயலர்,
NUBSNLW/FNTO,
காரைக்குடி.

நல்ல உள்ளங்களுக்கு நன்றி ! Thanks to the brave hearts !


16/04/2013 அன்று நடைபெற்ற தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் சங்க வாரியாகப் பெற்ற வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அகில இந்திய அளவில் 99,380 வாக்குகளைப் பெற்று BSNLEU முதலிடத்தையும் 61,915 வாக்குகளைப் பெற்று NFTE இரண்டாமிடத்தையும் 14,088 வாக்குகளைப் பெற்று FNTO மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 6,922 வாக்குகளைப் பெற்று NFTE முதலிடத்தையும் 6,178 வாக்குகளைப் பெற்று BSNLEU இரண்டாமிடத்தையும், 1,217 வாக்குகளைப் பெற்று FNTO மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.

காரைக்குடி மாவட்டத்தில் 274 வாக்குகளைப் பெற்று NFTE முதலிடத்தையும் 123 வாக்குகளைப் பெற்று FNTO இரண்டாமிடத்தையும் 77 வாக்குகளைப் பெற்று BSNLEU மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

உணர்வோடு FNTO-வுக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி !

Thursday, April 18, 2013

16/04/2013 தேர்தல் – தமிழ்நாடு முடிவுகள்


16/04/2013 அன்று நடைபெற்ற தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் சங்க வாரியாகப் பெற்ற வாக்குகள்:
Tamil Nadu Circle Election Results - 2013
Sl. No.
Name of SSA
FNTO  (16)
NFTE  (15)
BSNLEU  (9)
1
Circle Office
96
225
194
2
Coimbatore
69
586
1022
3
Coonoor
4
47
176
4
Cuddalore
55
528
283
5
Dharmapuri
20
70
309
6
Erode
26
392
521
7
Karaikudi
123
274
77
8
Kumbakonam
64
378
96
9
Madurai
199
585
797
10
Nagercoil
32
116
280
11
Pudhuchery
28
154
164
12
Salem
67
696
584
13
Thanjavur
25
572
116
14
Tirunelveli
38
369
315
15
Trichy
249
741
454
16
Tuticorin
45
183
224
17
Vellore
62
772
310
18
Virudhunagar
15
234
256

Total
1217
6922
6178

Percentage
7.80
44.35
39.58
உணர்வோடு FNTO-வுக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி !

Tuesday, April 9, 2013

ஒலிக்கதிரே! மறந்து போச்சா?

நேற்றைய இடுகையில் உண்மையில் இரண்டு கட்டப் பதவி உயர்வு என்பதை கோரிக்கையாக வைத்தது நமது தேசிய சங்கமே என்று தெரிவித்திருந்தோம். இதோ அந்த மூன்றாவது ஊதியக் குழுவின் அறிக்கையில் இதற்கான ஆதாரம்

img291

img292

இதில் கடைசி பத்தி

img292 - 1

இதன் தொடர்ச்சி

img293 - 1img293

We expect Olikkathir and NFTE to issue corrections to their article in March 2013 Olikkathir. We request atleast hereafter NFTE shall not claim the achievements of FNTO/FNPTO as that of NFPTE/NFTE.

We request all members to think and decide which union is actually working sincerely for the welfare of the employees, before casting their votes.

Vote only for FNTO in Dheepam symbol.  

Saturday, April 6, 2013

மாற்றான் சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடாதே

மார்ச் 2013 “ஒலிக்கதிர்” இதழில் “கோயபல்ஸ் பிரசாரம்” என்ற தலைப்பில் 1970களில் தோழர் குப்தா இரு கட்ட பதவி உயர்வு கோரிக்கையை முன்வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் மேற்படி திட்டத்தை முன்வைத்தது FNPTOவின் தானைத் தலைவர் தோழர் கே. ராமமூர்த்தி என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்.

தோழர் கே.ஆர். அவர்களால் தபால் தந்தி ஊழியர் அனைவருக்கும் குறைந்த பட்சம் இரண்டு பதவி உயர்வுகள் வேண்டுமென்று 3ஆம் ஊதியக் குழு முன் 1970ல் கோரிக்கை வைக்கப் பட்டது. மாறாக NFPTE சம்மேளனம் 35 ஆண்டு கால ஊதிய விகிதம் வேண்டுமென்றும், 10 ஆண்டுகளுக்குப்பின் திறமைத் தேர்வு (proficiency exam)மூலம் 3 இன்க்ரிமெண்டும், அடுத்த 10 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தேர்வு நடத்தி மேலும் 3 இன்கிரிமெண்ட் தரவேண்டுமென்றும் கூறியிருந்தார். இதற்கு மாற்றாக 3 குறுகிய ஊதிய விகிதங்கள் தரலாம் என்றும் கோரியிருந்தார்.

இந்தத் தகவலை மூன்றாம் ஊதியக்குழு அறிக்கையில் 164ம் பத்தியில் காணலாம். இரு கட்டப் பதவி உயர்வு என்பது ஊழியருக்கு உடனடி பலன் அளிக்கக் கூடியது என்ற தோழர் கே.ஆர் அவர்களின் வாதங்களின் பலனாகவே அதை தோழர் குப்தாவும் ஏற்றுக்கொண்டு, தேசிய கவுன்ஸிலில் இந்தக் கோரிக்கை விவாதிக்கப் பட்டது. இரு சம்மேளனங்களும் இணைந்து விவாதித்து NFPTEயின் கே.ஜி. போஸ் அணியினரின் எதிர்ப்பையும் மீறி OTBP/BCR  திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. இதுவே மற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்மாதிரியாக அமைந்து ACP என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டது.

2000 செப்டம்பரில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் FNTO/BMS கலந்து கொள்ளவில்லை என்று மேலும் ஒரு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. மேற்படி வேலை நிறுத்தத்தில் NFTE  FNTO  BTEF  சம்மேளனங்கள் கூட்டாக வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தன. FNTO NFTE சம்மேளனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மூன்று நாட்கள் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தன. ஆனால் BTEF சம்மேளனம் முதல் நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டு பின்னர் அரசியல் காரணங்களுக்காக வாபஸ் பெற்றது. NFTEயில் அன்றிருந்த AITEU (நம்பூதிரி அணி)தான் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை . “ஒலிக்கதிர்” மாற்றான் சாதனைகளைத் தன் சாதனைகளாகப் பறை சாற்றுவது வேடிக்கைதான். மிகச் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளைக்கூடத் தவறாகச் சித்தரிக்கும் “ஒலிக்கதிர்” தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். தவறுகள் திருத்தப் படும் என்று நம்புகிறோம்.