FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, January 28, 2010

தமிழ் மாநிலச் செயற்குழு - 24, 25 ஜனவரி

ஜனவரி 24, 25 தேதிகளில் தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் INTUC மாவட்டக் கவுன்சில் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. முதல்நாள் மாநிலத் தலைவர் தோழர் அப்துல் வகாப்பும் இரண்டாம் நாள் மாநிலச் செயல் தலைவர் தோழர் K.R.பழனிச்சாமி யும் தலைமை வகித்துக் கூட்டத்தைத் திறம்பட வழிநடத்தினர். INTUC சேலம் மாவட்டக் கவுன்சில் தலைவர் திரு கல்யாணசுந்தரம் துவக்கவுரை நிகழ்த்தி னார். தொழிலாளர்களைப் பாதிக்கக்கூடிய அரசாங்கத்தின் கொள்கை முடிவு களை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராடவும் தயார் என்ற INTUC-யின் அகில இந்தியத் தலைவர் திரு சஞ்சீவரெட்டியின் அறைகூவலைச் சுட்டிக் காட்டிப் பேசிய அவரது துவக்கவுரை அனைவரது சிந்தனையையும் தட்டி யெழுப்பியது. INTUC -யின் சேலம் மாவட்டப் பொதுச்செயலர் திரு சொர்ண ராஜின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, நமது பொதுச்செயலர் தோழர் வள்ளி சிறப்புரையாற்றினார். உருப்படாத ஊதிய உடன்பாடு உள்ளிட்ட அனைத்து விசயங்கள் பற்றியும், ஊழியர் விரோத BSNLEU-வின் துரோகம் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். பொருளாய்வுக்குழுவில் மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன் செயல்பாட்டு அறிக்கையை வாசிக்க, தொடர்ந்து மாவட்டச் செயலர்களும், மாநில நிர்வாகிகளும் விவாதத்தில் பங்கேற்றனர். அமைப்புநிலை, நிதிநிலை, கூட்டணியின் செயல்பாடு, நிர்வாகத்துடனான உறவு, மகளிர் அணி, ஒப்பந்தத் தொழிலாளர், ஓய்வு ஊதியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செழுமையான விவாதங்கள் நடைபெற்றன. அகில இந்திய உதவிப் பொதுச்செயலர் தோழர் ஆண்டியப்பன் எழுச்சியுரையாற்ற, மாநிலச் செயலர் விவாதங்களைத் தொகுத்துப் பதிலளித்தார். இறுதியாக, பொதுச்செயலர் நிறைவுரையாற்ற, தேசியச் சங்கப் பதாகையை உயர்த்திப் பிடிப்போமென்ற உணர்வு கொப்பளிக்க, கூட்டம் முடிவுற்றது. உருவிலே சிறிதாக இருந்தாலும் உன்னதமான ஏற்பாடுகளைச் செய்து அசத்திட்ட சேலம் மாவட்டச் சங்கத்திற்கு நமது நன்றிகள்.

ஊதிய உடன்பாட்டில் திருத்தம் வேண்டும்--- பொதுச்செயலர் கடிதம்

அங்கீகரிக்கப்பட்ட சங்கம் நிர்வாகத்துடன் செய்துகொண்டுள்ள ஊதிய ஒப்பந்தம் ஊழியர்களுக்குக் குறைந்த பட்ச நீதியைக்கூட அளிக்கவில்லையென்றும், அந்த ஊதிய உடன்பாட்டில் திருத்தங்கள் வேண்டும் என்றும் நமது பொதுச் செயலர் BSNL CMDக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் நகல் இங்கே !



To

Sri. Kuldeep Goyal
CMD BSNL
New Delhi 

Sir,

Sub: Recommendations of wage revision committee for BSNL non-executives

Kindly refer to the above recommendations signed by the committee on 15/01/2010. We feel that the committee has not done even minimum justice to BSNL workers. FNTO therefore request BSNL management to favorably consider and revise at least the following recommendations before formalizing the wage agreement.

1)      Para 3(i) - Minimum pay scale may be raised to Rs.12500 with subsequent upgradations in other higher scales
2)      Para 3(4)3b) - IDA neutralization may be revised to 78.2% on basic pay
3)      Para 4 - Perks and allowances may be given effect from 27/2/09 as was done in the case of executives
4)      4.2.1 - Transport allowance may be revised upwardly as was done in the case of central govt. staff
5)      Para 4.3.1 - Food allowance may be allowed to continue
6)      4(4)1 - OTA rates may be doubled (OTA is granted only on holidays, therefore the expenditure will be minimum)
7)      4.5.1 - Number of casual leave may be increased to 15 days (Status Quo)
8)      4.5.5 - Uniform pattern of 5 days week may be implemented for all administrative staff. (Working days were increased during the last wage revision and it was assured in national council that a review will be done during this revision)
      9)  Para 6.1.2:  There should be no discrimination/differentiation for the BSNL             Pensioners who were absorbed on/after 01.10.2000 and governed under Rule             37A. All such pre-post 01.01.2007 BSNL Absorbed Pensioners should have             their Pension Revision             w.e.f. 01.01.2007.


With Regards,

Yours sincerely,
K.VALLINAYAGAM
GENERAL SECRETARY

Copy to: Shri. Gopal Das, Director HRD, BSNL ND
Shri. Shakeel Ahmed, GM (SR), BSNL, New Delhi





தகவல் :-- www.fnto.org




Wednesday, January 27, 2010

From Circle Secretary

It is understood that it will take some time to sign a formal agreement in the prescribed format and threafter it will be sent to Management for approval. Fnto is trying to get some modifications.( message from Sri D.Chandrasekaran, Circle secretary)

BSNLEU குற்றச்சாட்டுக்களுக்கு பொதுச்செயலர் பதில்


FNTOமீது BSNLEU குற்றச்சாட்டுக்களுக்கு
நமது பொதுச்செயலர் வள்ளியின் பதில்கள்.



ஜனவரி 10ம் தேதியிட்ட டெலிகுருசேடரிலும், அவர்கள் இணையதளத்திலும் FNTO மீது BSNLEU சில குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளது. அங்கீகரிக்கப் பட்ட சங்கத்துக்கு, எப்போதெல்லாம் அவர்கள் முக்கியமான ஊழியர் பிரச்சினைகளில் தவறிழைக்கிறார்களோ, அப்போதெல்லாம், நம் மீது குறைகள் சொல்லி, அவர்கள் தவறுகளிலிருந்து ஊழியர்கள் கவனத்தைத் திசை திருப்புவது என்பது வாடிக்கை. ஆனாலும்கூட இப்போது நம் மீது சொல்லப்பட்டிருக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு நாம் கண்டிப்பாய் பதில் அளிக்க கடமைப் பட்டிருக்கிறோம். ஊழியர்கள் உண்மைகளை அறிய இது அவசியமானது


Strike against corporatization of DOT into BSNL

 DOTயை கார்ப்பரேஷனாக்க யத்தனித்தபோது அன்றிருந்த 3 சம்மேளனங்கள் பல போராட்டங்களை நடத்தின என்பதும், கார்ப்பரேஷனாவது தவிர்க்கமுடியாத நிலையில் மூன்று சம்மேளனங்களும் ஒன்றிணைந்து 3 நாட்கள் ஸ்ட்ரைக் நடத்தி, அரசு பென்ஷன், வேலைக்கு உத்தரவாதம், BSNL நன்கு செயல்பட அரசிடமிருந்து நிதி ஆதாரங்கள், சில ஊழியர் பிரச்சினைகள் ஆகியவற்றை வெற்றிகரமாகப் பெற்றன என்பது மறுக்க முடியாத சரித்திரம். அன்று இதே BSNLEU தலைமையின் கீழ் இருந்த AITEU(N) மற்றும் ஒன்றிரண்டு சங்கங்கள் ஊழியருக்கு துரோகமிழைத்த வரலாறுகளை மறைத்து இன்று பொய்களை அள்ளி வீசுகிறார்கள். (அவை எடுபடாது என்று தெரிந்தும்)

Joint forum resolution to revert back to DOT



ITS அதிகாரிகளுக்கு ஒருவிதமாகவும் மற்றவர்களுக்கு ஒருவிதமாகவும் அரசின் பாரபட்சமான போக்கைக் கண்டித்து BSNLஐ DOTயாக மாற்றக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. அதில் நாமும் ஒருவர். பி எஸ் என் எல் ஊழியர்களை மீண்டும் DOT ஊழியர்களாக மாற்றக் கோரினோம். ப்ரசார் பாரதியில் இப்படி நடந்து முன் உதாரணம் உள்ளது.தீர்மானத்தை வலியுறுத்தி மேல் நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய பொறுப்பு அந்த Joint Forum, மற்றும் அதன் கன்வீனரான BSNLEU பொதுச்செயலரது கடமை. ஏன் செய்யவில்லை? ITS/ Government உடன் ஏதும் மறைமுக உடன்பாடா? இப்போதுகூட காலதாமதமாகி விடவில்லை. மத்திய அரசு ஊழியருக்கும் கீழாக நாம் சம்பளம் பெறப்போகும் அவலத்தை எதிர்த்து அந்தத் தீர்மானத்தின்மீது மேல் நடவடிக்கை எடுக்கலாமே? செய்வாரா? முதல் சம்பள கமிஷனில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.4400/ கேட்கப்பட்டதும் அதற்காக மற்ற சம்மேளனங்களுடன் எப் என் டீ ஓவும் இணைந்து முயற்சித்ததை அவர்களால் மறைக்க/மறுக்க முடியாது.


Settlement of Anomaly


அனாமலி பிரச்சினை தீராததற்கு FNTO, NFTE பொறுப்பாக முடியாது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 2005லேயே தக்க தீர்வுகள் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு, அவைகளை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டு DOTக்கு அனுப்பியது. தொடர் முயற்சிகள் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் மெத்தனப் போக்கினால் அதை ஏற்காமல் DOT திருப்பி அனுப்பியது. அதை மீண்டும் தகுந்த விளக்கங்களுடன் DOTயை ஏற்கவைக்காமல், ஸ்பெஷல் பே என்று அவசரமாக முடிவு செய்து தவறிழைத்தது. ஆக அனாமலி பிரச்சினை தீரவில்லை. இதை மறைப்பதற்காக நம் மீது பழி சொல்கிறார்கள்.



Why FNTO did not join   negotiation or struggle for 2nd Wage Revision.

ஊதிய உயர்வு பிரச்சினைகளில், வரவிருந்த தேர்தலை மனதில் கொண்டு, எல்லாப் பெருமைகளும் தனக்கே வரவேண்டும் என்ற குறுகிய நோக்கில், நம்முடன் பிரச்சினைகள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், அத்தீர்வுகளுக்கான போராட்டங்கள் என எதையுமே நம்மிடம் பேச அவர்கள் மறுத்ததால் இணைந்து செயல்படமுடியவில்லை. 2009தேர்தல் முடிந்தபின்னும்,நமது ஒத்துழைப்பை நல்குவதாக நாம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள், நமது ஊழியர்களை மாற்றுதல் செய்வது, நமது சங்கப் பலகைகளை அகற்றவைப்பது என்று செயல்பட்டார்கள். அவர்கள் நடத்திய 48 மணி நேர வேலைநிறுத்தம் பற்றி எல்லாவற்றையும் முடிவெடுத்த பின்னர், நமக்கு ஒரு கடிதம் மட்டும் அனுப்பினார்கள். தேதியை மாற்றி, கோரிக்கைகளை சேர்ந்து முடிவெடுத்துப் போராடலாம் என்ற நமது வேண்டுகோள் ஏற்கப் படவில்லை.

Minimum pay settled in 1st wage revision

நமது முதலாவது ஊதியக் குழுவிடம் நாம் வைத்த குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளம் ரூ 4400 என்பதை அன்றிருந்த மூன்று சம்மேளனங்களும் ஒன்றுபட்டு நின்றதன் காரணமாக ரூ 4000 எனப் பெற முடிந்தது. இதற்காக முதல் தேர்தலையே அப்போது ஒத்திவைத்தோம். ஆனால் இன்று அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் போக்கினால், குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளமாக நாம் பெற்றிருக்கவேண்டிய ரூ.14000 அல்லது ரூ.12500 என்பதைப் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.


Minimum pay settled in 1st wage revision


ஜாயிண்ட் போரம், சில அரசியல் நோக்கங்களுடன் சிலருக்கு மட்டும் ஆதரவாகச் செயல்பட ஆரம்பித்தது. நம் மீது தொடர் தாக்குதல்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தால் நடத்தப்பட்டபோது அதில் தலையிட்டு நியாயமான நடவடிக்கைகள் எடுக்காமல், அது FNTO – BSNLEU விற்கு இடையேயான தனிப்பட்ட விஷயம் என்று ஒதுங்கிக்கொண்டது. இதனாலேயே நாமும், என் எப் டீ ஈயும் அதை விட்டு விலக நேர்ந்தது. BSNLEU மற்றும் சில சங்கங்களின் நோக்கங்களுக்காகவே செயல்படும் அந்த அமைப்பு, FNTO,NFTE விலகியபிறகு எந்தவிதமான பெரிய போராட்டங்களையும் நடத்த முடியவில்லையே? ஊழியர்களுக்கு உண்மைகள் தெரியும்.


Whether FNTO criticism is against any individual, unethical and abusive?


கண்டிப்பாக இதுவரை நாம் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தலைவரையும் விமர்சித்ததில்லை. அங்கீகரிக்கப்பட்ட சங்கம் மற்றும் நிர்வாகத்தின் தவறுகளை மட்டுமே நாம் விமர்சிக்கிறோம். இதைத் தாங்க முடியாத அங்கீகரிக்கப்பட்ட சங்கம் நாம் புழுதி வாரித் தூற்றுவதாகச் சொல்கிறது. நமது விமர்சனங்கள் நேரடியான, நியாயமான, நாகரீகமான விமரிசனங்கள் என்று ஊழியர்களுக்குத் தெரியும். அதனாலேயே தினமும் நமது இணைய தளத்துக்கு அதிகாரிகள் முதல் அனைவரும் வந்து உண்மைகளைத் தெரிந்துகொள்கிறார்கள் என்பதை அந்த சங்கத்தால் ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால் ஊழியர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் இரண்டாவது சம்பள உடன்பாடு, மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில் அடைந்திருக்கும் ஏமாற்றமும் விரக்தியும் எதிர் வரும் தேர்தல்களில் நிச்சயம் பிரதிபலித்து அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்.

2009 ஜனவரியில் BSNLலின் நிதி நிலை மிக நல்ல நிலையில் இருக்கும்போது ஊதிய உயர்வு பற்றி சிறப்பாக வாதிட்டு ஊழியர்களுக்கு நன்மை செய்திருக்கக் கூடிய ஒரு பொன்னான தருணத்தைப் பாழாக்கிவிட்டு எந்தவித லாபமும் இல்லாத ஒரு வெற்று உடன்பாட்டை 2010 ஜனவரியில் கண்ட அங்கீகரிக்கப் பட்ட சங்கம் மற்றவர்களைக் குற்றம் சொல்கிறது.

இப்போதும்கூட, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பல ஊழியர் பிரச்சினைகள் நிலுவையில்தான் உள்ளன. தவறுகளைத் திருத்திக்கொள்வதில் தாமதம் என்பது கிடையாது. இப்போதாவது, BSNLEU தங்களையே மறுபரிசீலனை செய்துகொண்டு தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் செய்வார்களா?




Tuesday, January 26, 2010

IDA உத்தரவுகள்

9.4% கூடுதல் கிராக்கிப் படிக்கான (IDA) உத்தரவுகள் நேற்று DPEயால் வெளியிடப்பட்டுள்ளன. (தகவல்; தோழர் சந்திரசேகரன், மாநிலச் செயலர்)

வள்ளி பதில்கள்

BSNLEU சங்கம் FNTO, NFTE சங்கங்களின் மீதும், அவற்றின் தலைவர்கள் மீதும் பல குற்றச் சாட்டுக்களைக் கூறியுள்ளதே?


வள்ளி:-- ஒரு ஊதிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நியாயமாகப் பார்த்தால் உடன்பாட்டில் கையெழுத்திட்ட அங்கீகாரச் சங்கம் உடன்பாட்டின் சிறப்பம்சங்களை விளக்கி, அந்த உடன்பாட்டால் ஊழியர்கள் பெறப்போகும் பயன்களை விரிவாக எடுத்துரைத்து அறிக்கைகள் விடவேண்டும். மாறாக, நம் மீது புழுதி வாரித் தூற்றுகிறார்கள். உடன்பாட்டில் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாத வெற்று உடன்பாடு என்பதாலேயோ அல்லது ஏமாற்றம் அடைந்திருக்கும் ஊழியர்களைத் திசை திருப்புவதற்காகவோ நம் மீது குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். அவர்களுக்கு தக்க பதில்கள் அளிப்போம்.

Sunday, January 24, 2010

பென்ஷன் -- நிர்வாகம் விளக்கம்

24.01.2010 : Ministry of Communication & IT, DoT, New Delhi vide No: 40-12/2007-Pen.(T) dated January 5, clarifies on the subject of “ Pension liability of BSNL towards pensionary benefits including Family Pension to its employees” saying

“ 2.. In this context, it is hereby clarified that the above-said limit of 60% is for normal funding. This does not in any way distract from the fact that the ultimate liability towards pensionary benefits including family pension to the BSNL employees (excepting those recruited after 01.10.2000), as per sub-rule 21 of Rule 37-A of CCS (Pension) Rules, 1972, lies with the Government of India. If BSNL, for any reason, is not able to contribute to the extent prescribed in Para 1 above, the Government of India will still pay the admissible pensionary benefits including Family Pension to BSNL employees (Excepting those recruited after 01.10.2000) (From www.fnto.org)

ஜனவரி 5ம் தேதி DOT பென்ஷன் பற்றி ஒரு விளக்கமளித்துள்ளது.
அதாவது BSNL பென்ஷன் நிதிக்காக 60% அளிக்க வேண்டும் என்பது சாதாரண நடைமுறைதான் என்றும், இந்த 60% என்னும் நிபந்தனை பி எஸ் என் எல் ஊழியர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் பென்ஷன் அளிப்பதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்றும் ஒருவேளை பி எஸ் என் எல் இந்த 60% நிதியை அளிக்க முடியாத நிலைக்குச் சென்றாலும் Sub rule 21 of Rule 37-A of CCS (Pension) Rules 1972ன்படி 2000ல் DOT யிலிருந்து BSNLல் இணைந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியமும், அவர்கள் குடும்பத்தாருக்கு குடும்ப ஓய்வூதியமும் அளிப்பது இந்திய மத்திய அரசின் பொறுப்பு என்றும் அதில் தெளிவு படுத்தப் பட்டுள்ளது.
இது ஞாபக சக்தி உள்ளவர்களுக்கு:-- இந்த 37(A) பிரிவு BSNL ஆக மாறியபோது அன்று நிர்வாகத்துடன் பேசும் வாய்ப்பைப் பெற்றிருந்த FNTO, NFTE, BMS சங்கங்களால் வாதாடிப் பெற்ற நன்மை என்பதையும் அதனாலேயே இன்று இத்தகைய உறுதிகளைப் பெற முடிகின்றதென்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அன்றிருந்த சங்கங்கள் ஊழியர் நலனையே ப்ரதானமாகக் கொண்டு ஊழியர் பிரச்சினைகளில் இப்படித்தான் செயல்படவேண்டும் என்று திட்டம் தீட்டி வெற்றிகள் கண்டன. ஆனால் அது அந்தக் காலம். இப்போதோ எப்படியாவது பிரச்சினைகள் தீர்ந்தால் போதும் என்று நினைக்கின்றவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும். Food corporation Of Indiaவிலும் pay anamoly பிரச்சினை. அங்கு அவர்களால் ஜூனியரைக் காட்டிலும் ஸீனியர் குறைவாகச் சம்பளம் பெறும் நிலையில் ஸூனியர்களுக்கு ஜூனியர்களின் சம்பள விகிதம் அளிக்கப் பட வேண்டும் என்ற உத்தரவை சங்கங்களால் பெற முடிந்திருக்கிறது. இங்கோ? அதை special pay என்று ஏதோ குடும்பக் கட்டுப்பாட்டிற்குப் பெறுவதைப் போல்தான் பெற முடிந்திருக்கிறது. இது இந்தக் காலம். நிர்வாகத்தைத் தங்கள் வாதத் திறமைகளால் வென்று நல்ல முடிவுகளைப் பெற்றது அந்தக் காலம். நிர்வாகத்தின் உத்தரவுகளை உடன்பாடு என்று ஊழியரை நம்ப வைக்க முயல்வது இந்தக் காலம்.

Friday, January 22, 2010

முதல் முழக்கம்

தமிழ் மாநிலத்துக்கென்று ஒரு தனி வலைத்தளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற நினைப்பு இன்று நிறைவேறியுள்ளது. அகில இந்திய சங்கத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான www.fnto.org லிருந்து செய்திகளைத் தமிழாக்கித் தருவது, நம் தமிழகச் செய்திகளை உறுப்பினர்களுக்குக் கொண்டு செல்வது என்று பல்வழியில் இத்தளம் தொடரும். எதிர்வரும் ஜனவரி 24, 25 தேதிகளில் சேலத்தில் நடக்க உள்ள மாநிலச் செயற்குழு செய்திகளுடன் அடுத்த மடல் விரியும். நிர்வாகத்தின் உத்தரவை உடன்பாடு என்று ஊரை ஏமாற்றுவோரால் ஊழியர் அடையப்போகும் நஷ்டங்களைப் பற்றி நமது பொதுச் செயலர் அறிக்கை இங்கே!

UNI INTUC

National Union of BSNL Workers ( FNTO)

Regd. No. 4897)

T-16, Atul Grove, New Delhi - 110 001. Phone/Fax : 011-2372 3202 / 2335 8891 (Camp Office at Chennai - 044-2670 5445)

K. VALLINAAYAGAM

General Secretary.

Ref : 22/FNTO/10

Date: 21.01.2010.

CIRCULAR

A hollow wage agreement

Wage agreement signed between BSNLEU alliance and Management on 15-1-10 is nothing but a futile exercise which does not benefit any category of employee. Obviously BSNLEU wasted precious hours immediately after IV verification/wage settlement for executives for about one year pressing for 5 year wage revision and when the demand could not be met with they rushed thro’ the exercise unmindful of the past achievements (by other unions) and expectation of the staff in general. They also failed to forge unity among all non-executive unions to get a better deal. FNTO/BWA were cautioning the Recognized Union as well as gave many suggestions and tips to bargain better both individually and collectively without any result.

Even this 30% fitment benefit would not have been possible without FNTO and BWA’s persistent pressure, as BSNLEU was ready to accept less than 25% in case of a 5 year revision. Both in Promotion Policy and wage revision BSNLEU and their partners betrayed the BSNL workers but they are crying that unrecognized unions have betrayed them. As there is nothing to boast in the agreement they want to divert the attention of the workers from their failure to avoid a backlash from employees. But they are watching the performance of the representative union sadly right from the beginning and that is why there is no celebration or Jubilance even in BSNLEU circles. Workers will stand face to face with the betrayal of BSNLEU when wage revision and Promotion Policy are actually implemented.

On more than one occasion FNTO/BWA pressurized the management to offer a better deal with reference to scales, fitment, span and allowances but management exploited the non-executives availing the lethargic, non-performing and inefficient handling of the recognized union and their partners. Because of the blunders committed in Promotion Policy and wage revision BSNL workers will suffer cumulative loss both monetarily as well as in status compared to other PSU and Central/State Govt. employees. In short it is a ‘Dark- Age’ has descended on BSNL workers. Some points are appended below to show how workers are cheated in the wage revision.

  1. Parity ratio between highest and lowest paid (10 : 1) is not maintained (As per ratio a minimum of Rs.12500 scale is eligible but now minimum is Rs.7760).
  2. Inclusion of 78.2% IDA for fixation could have been achieved easily but BSNLEU has drawn blank.
  3. Pay benefit will be between Rs.600 to Rs.1000 only because of poor scales thus juniors are affected.
  4. Because of imminent stagnations seniors (particularly in supervisory cadres) will be affected. If 6th CPC recommendation of transcending to next higher scale is achieved this could have been avoided.
  5. CCA and Diet allowance have been abolished.
  6. There is no increase in most of the allowances No upward revision in Transport Allowance (For Govt. employee it is increased by 4 times and DA is also given) Except HRA all allowances take effect only from 15-01-10.
  7. Revision of scales for Sr. TOA, TTA (OTBP-BCR), T.M., Driver, Cable Splicers etc., which are long pending were not settled.
  8. 5 days week has been forgotten altogether.

In totality no BSNL worker (irrespective of cadre or service seniority) is benefited by this wage agreement. Thus the wage revision exercise done during the last 3 years is a futile one. It is high time that each and every worker realize that there is no future for them if BSNLEU continues as their representative union.

FNTO Zinadabad!

K.Vallinayagam

General Secretary

This may be circulated to al l Branches.