FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, July 1, 2013

தோழர் S.குருவன் பணி நிறைவு - 30/06/2013

வாழ்த்திடுவோம் – Give a big hand
விசயமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்
விதிவசத்தால் காணாமல் போனபோது –
இடைவெளியை நிரப்ப வந்த இந்திரரும்
அறிவொளியைத் தேடிப் போனதாலே –
E-4 காரைக்குடி மாவட்டச் சங்கம்
இக்கட்டிலே சிக்கித் தவித்தபோது,
இதோ ”நான் இருக்கிறேன்” என்று
ஆபத்பாந்தவனாக அனாதரட்சகனாக –
எங்கிருந்தோ அல்ல – இங்கிருந்தே வந்து
மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்று
திறம்படச் சங்கப் பணியாற்றியதாலே
மாநிலத் துனைத் தலைவராக உயர்ந்து
தொழிலாளர்க்காக உழைத்திட்ட தோழர்
குருவன் இன்று பணிநிறைவு பெறுகின்றார்.
சிறக்கட்டும் அவர்தம் பணிஓய்வுக் காலம் –

சிவக்கட்டும் நம்கைகள் கரவொலியாலே !

30/06/2013 -ல் பணி நிறைவு - வாழ்த்துகள்

வாழ்த்துகிறோம் !

30-06-2013 அன்று இலாக்காப் பணியிலிருந்து ஓய்வு பெறும்  தோழர்கள்

தேசியச் சங்கத்தின்
மாநிலத் துணைத் தலைவர்

S.குருவன், TM / காரைக்குடி

தேசியச் சங்கத்தின்
முன்னாள் மாவட்டச் செயலர்

M.கணபதி, SDE/சிவகங்கை

மற்றும்
P.நயினான், Sr.TOA(P)/ பரமக்குடி
S.துரைப்பாண்டியன், TM/KKD
A.சேகரன், TM / தினைக்குளம்
P.ராமசாமி, TM / பரமக்குடி

ஆகியோரது பணி நிறைவுக் காலம் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாக அமைய மாவட்டச் சங்கம் மனதார வாழ்த்துகிறது.

30/06/2013                          FNTO/KKD.SSA