FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, April 28, 2020

மூத்த தலைவர் A.K மறைவு - Veteran leader A.K is no more

 



அந்நாளில் தமிழ் மாநிலத்தில் FNPTO தொழிற்சங்கத்தை நிறுவுவதற்கு அரும்பாடுபட்டவர்களில் முன்னணியில் நின்றவர் தோழர் A.K. பல காலம் அவரது எலக்ட்ரிக்கல் செக்சன் தான் மாநிலச் சங்க அலுவலகமாக செயல்பட்டது. பின்னாளில்,  FNTO E-3 சங்கம் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்தபோது மாநிலச் செயலராகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி அனைத்து தரப்பினரிடமும் நன் மதிப்பினை பெற்றதன் வாயிலாக தொய்வின்றி சங்கத்தை வழிநடத்தினார். பணி ஓய்வுக்குப் பிறகும் சங்கப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த மூத்த தலைவர் A.K என்ற A.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்று (28.04.2020) அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்து சொல்லொண்ணாத்  துயரமடைந்தோம். அவரது மறைவுக்கு நமது கொடிதாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம். தலைவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sri A.K. @ A.Krishnamoorthy was one among the top founder leaders of FNPTO movement in Tamil Nadu Circle. He was working as a Technical Supervisor in TN Circle office at Anna Road, Chennai for a long time and his Electrical Section was serving as the Circle union office till his retirement. He took charge as the Circle Secretary of FNTO E-3 boldly at a time when the union encountered a severe crisis at Organisational level in Tamil Nadu and worked so efficiently to keep the rank and file in tact. He was involved in printing and despatching the journal "Oli Alai" even after his retirement and he never failed to attend any meeting or function of the union anywhere in spite of his health condition. We were shocked to hear the sad news of his sudden demise today morning.  His loss is irreparable to the FNTO movement. We dip our flag and salute his selfless spirit.

FNTO சார்பில் நிவாரணம் - Relief to CLRs at Karaikudi


ஏற்கனவே பல மாதங்களாக சம்பளம் வராத நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவும் சேர்ந்துள்ளதால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நமது  BSNL ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு காரைக்குடி FNTO சங்கத்தின் சார்பில் உதவி  செய்ய முடிவெடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நமது தோழர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு (overwhelming response) கிடைத்தது. தலா 1100/- ரூபாய் மதிப்பிலான சாப்பாட்டு அரிசி (10 kg) பை மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 16 பேருக்கும், அரிசிப் பை மட்டும் 2 பேருக்கும் என மொத்தம் 18 பேருக்கு வழங்கப்படது. காரைக்குடி சுப்பிரமணியபுரம் தொலைபேசி நிலையத்தில் 11/04/2020 காலை 11.00 மணியளவில் சமூக இடைவெளி பேணும் முகத்தான் மிக எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நமது FNTO மற்றும் BDPA(I) தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். இத்தகைய ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக பொருளுதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.


14/04/2020 தமிழ் புத்தாண்டு தினத்தின் துவக்கமாக, காலையில், காரைக்குடி  FNTO கிளையின் சார்பாக ஏற்கனவே நிவாரணம் வழங்கிய போது விடுபட்டுப்போன  ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவருக்கு, தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப் பட்டது.
நமது சேவை தொடரும்...