FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, February 1, 2010

சேலம் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்

சேலத்தில் 24, 25 ஜனவரியில் நடைபெற்ற தமிழ்மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
  1. அங்கீகரிக்கப்பட்ட CITU சார்ந்த தொழிற்சங்கத்தோடு 15-01-2010 அன்று போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் 12,500/- என நிர்ணயிக்கப்பட்டு ஊதியங்களை மாற்ற வேண்டும். 1-1-2007 முதல் பெறும் கிராக்கிப்படி 78.2% சம்பளத்தோடு இணைக்கப்பட்டு புதிய சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.
  2. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அனைத்து அலவன்ஸ்களும் BSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அலவன்ஸ்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல் பாரபட்சமின்றி 27-2-2009 முதல் அமல்படுத்தப்பட வேண்டும்.
  3. ஏற்கனவே அமைச்சர் முன்னிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 5 கட்டப் பதவி உயர்வு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல எவ்வித பாரபட்சமுமின்றி ஊழியர்களுக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  4. கடந்த பத்தாண்டுகளாக டெபுடேசனில் இருக்கும் ITS உள்ளிட்ட குரூப்-A அதிகாரிகளின் இரட்டை நிலை நீக்கப்பட்டு உடனடியாக BSNL கம்பெனியில் அவர்களது நிலை இறுதி செய்யப்பட வேண்டும். ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட வேண்டும்.
  5. 93 மில்லியன் GSM மொபைல் கருவிகள் வாங்குவதற்கான தடைகள் நீக்கப்பட்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு உடனடியாக “பர்சேஸ் ஆர்டர்” வழங்கப்பட வேண்டும்.
  6. BSNL ஒரு சேவை நிறுவனம் என்பதாலும், கடுமையான போட்டிகளுக்கு இடையே செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதாலும், BSNL அரசுக்குச் செலுத்த வேண்டிய “லைசென்ஸ் கட்டணம்” ரத்து செய்யப்பட வேண்டும்.
  7. பங்கு விற்பனை விஷயத்தில் அரசு தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்வதைத் தவிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களையும் கலந்து ஆலோசித்து அதன்பிறகே இறுதி முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  8. “குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள்” அனைத்து சங்கங்களுக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment