FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, July 29, 2014

EID MUBARAK

FNTO Tamil Nadu Circle Union

Greets One and All

on the occasion of

ID-UL-FITR

*** "EID MUBARAK" ***

Tuesday, July 1, 2014

கிராக்கிப்படி (IDA) உயர்ந்தது

1-4-2014 முதல் கிராக்கிப்படி (IDA) யில் 2.1 சதவீதம் சரிவு ஏற்பட்டு, 88.4 சதவீதமாகக் குறைந்து. விலைவாசிக் குறியீட்டெண் சரிந்ததே இதற்குக் காரணம்.

இப்போது, விலைவாசி ஏறியிருப்பதால் விலைவாசிக் குறியீட்டெண் கூடியிருப்பதைத் தொடர்ந்து 1-7-2014 முதல் கிராக்கிப்படி (IDA) 2.9 சதவீதம் உயர்ந்து 91.3 சதவீதமாகியுள்ளது.

Tuesday, May 20, 2014

கண்ணீர் அஞ்சலி

FNTO-வின் முன்னாள் பொதுச் செயலாளரும் இந்நாள் புரவலருமான தோழர் K.வள்ளிநாயகம் அவர்களுடைய தாயார் திருமதி K.முத்தம்மாள் இன்று (20/05/2014) காலை சுமார் 9.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம். அம்மையாரின் நல்லடக்கம் நாளை (21/05/2014) காலை சுமார் 10.00 மணியளவில் சென்னை, பெரம்பூரில் நடைபெறும்.

அன்னையை இழந்து வாடும் தோழர் K.வள்ளிநாயகம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, May 5, 2014

சம்பள நிர்ணய முரண்பாடு - FNTO கடிதம் : FNTO takes up the Pay fixation anomoly case

1-10-2000-க்கு முன்பு பதவி உயர்வு பெற்று 1-10-2000-க்கு பிறகு வரக்கூடிய இன்கிரிமெண்ட் தேதியில் சம்பள நிர்ணயம் செய்ய ஆப்சன் கொடுத்த ஊழியர்களுக்கு பாதகமான உத்தரவு DOT-யால் வெளியிடப்பட்டுள்ள சூழ்நிலையில்  இத்தகைய முரண்பாடான  உத்தரவை எதிர்த்து  FNTO கடிதம் கொடுத்துள்ளது.


































Thursday, May 1, 2014

மே தின வாழ்த்துகள் - May Day Greetings

மே 1 – தொழிலாளர் தினம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்வீணில்
உண்டு களித்து இருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் இறைத்து மாயமாட்டோம்வெறும்
வீணருக்கு உழைத்திங்கு உடலம் ஓயமாட்டோம்
-      மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
---------------------------------------------------------------------------------

இரத்தத்தையே வியர்வையாகச் சிந்தி உழைத்த ஊழியர்களால்
உருவாக்கப்பட்டு உயர்ந்தோங்கிய BSNL என்னும் ஆலமரம் - இன்று
சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில்
ஒருபக்கம் BSNL தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டியும்
மறுபக்கம் BSNL நிறுவனத்தின் நிதியைச் சுரண்டியும் கொழிக்கும்
ஊழல் அ(ச)திகாரிகளின் முகத்திரையைக் கிழிப்போம் !
BSNL-ஐக் காப்போம், வாடிக்கையாளர்களை மகிழ்விப்போம் போன்ற
வெற்றுக் கோஷங்கள் மட்டுமே கவைக்குதவாதென உணர்வோம் !
உண்மையிலேயே BSNL வளர்ச்சிபெற வேண்டுமென்றால்
BSNL-ன் நிதியாதாரம் பெருக்கப்பட வேண்டுமென்றால் – நாம்
ஒவ்வொருவரும் இன்னும் கடுமையாக உழைப்போம் என
இந்த மேதினத்தில் நாமனைவரும் சபதமேற்போம் !

---------------------------------------------------------------------------------
Do your duty and claim your rights.
கடமையைச் செய், உரிமையைக் கேள்.
-      இது FNTO-வின் தாரக மந்திரம்
---------------------------------------------------------------------------------
அனைவருக்கும்
மே தின வாழ்த்துகள்