FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Sunday, January 19, 2014

All India Conference of FNTO – March 21 & 22 at Chennai:

தேசிய BSNL  தொழிலாளர் சங்கம்FNTO –வின் அகில இந்திய மாநாடு எதிர்வரும் 2014 மார்ச் 21 மற்றும் 22 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மத்தியச் செயற்குழுக் கூட்டம் மார்ச் 20-ம் தேதி நடைபெறும்.

Revision of Recritment Rules of JTO – Regularisation of officiating JTOs:

JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் கொண்டுவர நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே JTO-வாக தற்காலிக பதவி உயர்வில் பல ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்கள் நிரந்தரமாக JTO பதவி உயர்வு பெற வழி பிறந்திருக்கிறது.


இதேபோல TTA ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் கொண்டுவர நிர்வாகம் ஏற்றுக் கொண்டால், மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், தமிழகத்தில் மட்டும் ஏற்கனவே TTA பயிற்சிக்குச் சென்று பாதியிலேயே திரும்பி வந்திருக்கும் TM தோழர்கள் முன்கூட்டியே TTA பதவி உயர்வு பெற வழி பிறக்கும்.

Monday, January 13, 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ! HAPPY PONGAL !












































பச்சரிசி வெல்லமொடு பாலுடன் தேன்கலந்து
புத்துருக்கு நெய்யோடு புதுப்பானை தன்னிலே
பொங்கலோ பொங்கலென்று பொங்கலிடும் இந்நாளில்

தரணியெல்லாம் கொண்டாடும் தமிழர் திருநாளில்
பொங்குக மங்களம் எங்கனும் பூமியில்
தங்குக மகிழ்ச்சியும் மனநிறைவும் தங்களில்
என்றுமிக அன்போடும் ஆசைகள் பலவோடும்
உள்ளங்கனிந்து மிக வாழ்த்துகிறேன் உங்களையே!



தை பிறந்தால் வழி பிறக்கட்டும் !
BSNL தொழிலாளர் வாழ்வு சிறக்கட்டும் !!

அனைவருக்கும் FNTO தமிழ்மாநிலச் சங்கத்தின்
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் !

Monday, January 6, 2014

IDA Increase from 01/01/2014 = 5%

01/01/2014 முதல் கிராக்கிப்படி (IDA) 5 சதம் உயர்ந்துள்ளது. ஜனவரி 2014 சம்பளத்தில் புதிய IDA 90.5 சதமாகும்.