FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, August 15, 2013

தலைநகரச் செய்திகள் – New Delhi News

BSNL-ஐ சீரமைக்க National Convention:

கடந்த 3-8-2013 அன்று புதுடெல்லியில் BSNL தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தேசிய கருத்தரங்கம் (National Convention of BSNL Executives and Non-Executives) நடைபெற்றது. தொலைத்தொடர்பில் 100 சத அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பது  குறித்தும் BSNL-ஐ சீரமைப்பது குறித்தும் சீரிய விவாதங்கள் நடத்தப் பட்டன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கருத்தரங்கில் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தமது வாதங்களை முன்வைத்தனர். INTUC சார்பில் தோழர் தாமஸ் K. ஜான் அவர்களும் FNTO-வின் சார்பில் பொதுச் செயலர் தோழர் K.ஜெயப்பிரகாஷ் அவர்களும் உரையாற்றினர். FNTO-வின் மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட பல்வேறு சங்கங்களின் சார்பில் சுமார் 1000 சார்பாளர்கள் கலந்து கொண்டனர். பழுதற்ற தரமான தொலைத்தொடர்பு சேவைகளை அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை வசப்படுத்துவோம் என்ற பிரகடனத்தைச் செயல்படுத்த வலியுறுத்தப் பட்டது.

மத்தியச் செயற்குழு:

FNTO-வின் மத்தியச் செயற்குழுக் கூட்டம் கடந்த 3 & 4-8-2013 தேதிகளில் புதுடெல்லியில் நமது அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவான விவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில், அடுத்த அகில இந்திய மாநாட்டை சென்னையில் நடத்துவதென முடிவு செய்யப் பட்டது.

அதிகாரிகளுடன் சந்திப்பு:

கடந்த 5-8-2013 அன்று புதுடெல்லியில் DOT- யின் Member (Services) திரு S.C.மிஸ்ரா அவர்களை FNTO-வின் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான், பொதுச் செயலர் தோழர் ஜெயப்பிரகாஷ், உதவிப்பொதுச் செயலர் தோழர் D.D.மிஸ்திரி, தமிழ்மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன், பீஹார் மாநிலச் செயலர் தோழர் R.P.சின்ஹா, ஜார்கண்ட் மாநிலச் செயலர் தோழர் சத்திரபால் ஆகியோர் சந்தித்து விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS), MTNL & BSNL இணைப்பு, ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்

கடந்த 6-8-2013 அன்று புதுடெல்லி BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் GM(SR) திரு நீரஜ் வர்மா அவர்களை FNTO-வின் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான், பொதுச் செயலர் தோழர் K.ஜெயப்பிரகாஷ், உதவிப்பொதுச் செயலர் தோழர் D.D.மிஸ்திரி, தமிழ்மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன், அ.இ.துணைத் தலைவர் தோழர் V.N.ரத்தோட் ஆகியோர் சந்தித்து எரிச்சலூட்டும் மாற்றல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.


அதே 6-8-2013 அன்று புதுடெல்லி BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் Director (Finance) திரு K.C.G.K.பிள்ளை அவர்களை FNTO-வின் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான், பொதுச் செயலர் தோழர் K.ஜெயப்பிரகாஷ், உதவிப்பொதுச் செயலர் தோழர் D.D.மிஸ்திரி, தமிழ்மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன், அ.இ.துணைத் தலைவர் தோழர் V.N.ரத்தோட் ஆகியோர் சந்தித்து 78.2% IDA சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மெடிக்கல் அலவன்ஸ் குறித்தும் விவாதித்தனர்.

Wednesday, August 14, 2013

BDPA(I) formed in Karaikudi SSA of TN Circle

Karaikudi Telecom. District Branch of the BSNL & DoT Pensioners Association (India) was formed in the meeting of the Pensioners held at Karaikudi on 10/08/2013. The following office bearers were elected unanimously.

President:                  Sri B.Manoharan, SDE (Retd.) / Karaikudi
Vice-Presidents: (1)  Sri N.Kathiresan, TTA (Retd.) / Karaikudi
                             (2)  Sri T.S.Innasimuthu, TM (Retd.) / Sivaganga
                             (3)  Sri S.Chinnaraj, TM (Retd.) / Tiruppattur

Secretary:                 Sri S.Yogeswaran, Sr.TOA(G) (Retd.) / KKD
Deputy Secretary:    Sri K.Viswanathan, TTA (Retd.) / SGPN
Assistant Secretary: Sri S.Guruvan, TM (Retd.) / Karaikudi

Treasurer:                  Sri S.Albonse, STS (Retd.) / Devakottai
Assistant Treasurer: Sri K.Kannapiran, TTA(Retd.) / Karaikudi

Executive   : (1)  Sri S.Pitchumani, TTA (Retd.) / Devakottai
Committee : (2)  Sri S.Chandran, TM (Retd.) / Chittarkottai
 Members  : (3)  Sri A.Mathias, TTA (Retd.) / Sivaganga
                     (4)  Sri A.Mariappan, TM (Retd.) / Manamadurai
                     (5)  Sri T.Pichaiyan, TTA (Retd.) / Paramakudi
                     (6)  Sri S.Palaniappan, TM (Retd.) / Puduvayal

Auditor:              Sri M.R.Shanmugam, STS (Retd.) / Karaikudi

Nominated for Circle:  Sri M.Ganapathi, SDE (Retd.) / Sivaganga     
Executive Committee 

Thursday, August 8, 2013

முப்பெரும் விழா - காரைக்குடி - 10/08/2013

FNTO
தேசிய BSNL தொழிலாளர் சங்கம்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

முப்பெரும் விழா

மாவட்டச் செயற்குழு, பணி நிறைவு பாராட்டு மற்றும்
BDPA(I) ஓய்வூதியர் சங்கம் அமைப்பு

இடம்: GM அலுவலகம், காரைக்குடி.   நாள்: 10/08/2013 சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

தலைமை:
             தோழர் T.S.இன்னாசி முத்து, மாவட்டத் தலைவர்

முன்னிலை:
             தோழர் S.குருவன், மாநிலத் துனைத் தலைவர்
             தோழர் S.கிருஷ்ணமூர்த்தி, மாநில உதவிச் செயலர்                                         தோழர் N.குமார், மாநில அமைப்புச் செயலர்

வாழ்த்துரை
            தோழர் M.அப்துல் வகாப், தமிழ் மாநிலத் தலைவர்
            தோழர் S.முத்துக்குமார், மாவட்டச் செயலர், மதுரை
            தோழியர் G.மீனாட்சி, மாவட்டச் செயலர், BDPA(I), திருச்சி

சிறப்புரை:   உயர்திரு S.ஜெயச்சந்திரன்
                                      DGM(A), BSNL, காரைக்குடி
எழுச்சியுரை: தோழர் D.சந்திரசேகரன்
                                     தமிழ் மாநிலச் செயலர்

தோழர்களே, தோழியர்களே,
அலைகடலென ஆர்ப்பரித்து அணிதிரள்வீர் !


அழைப்பது: G.முத்துக்குமரன், மாவட்டச் செயலர், காரைக்குடி

Monday, July 1, 2013

தோழர் S.குருவன் பணி நிறைவு - 30/06/2013

வாழ்த்திடுவோம் – Give a big hand
விசயமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்
விதிவசத்தால் காணாமல் போனபோது
இடைவெளியை நிரப்ப வந்த இந்திரரும்
அறிவொளியைத் தேடிப் போனதாலே
E-4 காரைக்குடி மாவட்டச் சங்கம்
இக்கட்டிலே சிக்கித் தவித்தபோது,
இதோ ”நான் இருக்கிறேன்” என்று
ஆபத்பாந்தவனாக அனாதரட்சகனாக
எங்கிருந்தோ அல்லஇங்கிருந்தே வந்து
மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்று
திறம்படச் சங்கப் பணியாற்றியதாலே
மாநிலத் துனைத் தலைவராக உயர்ந்து
தொழிலாளர்க்காக உழைத்திட்ட தோழர்
குருவன் இன்று பணிநிறைவு பெறுகின்றார்.
சிறக்கட்டும் அவர்தம் பணிஓய்வுக் காலம்

சிவக்கட்டும் நம்கைகள் கரவொலியாலே !

30/06/2013 -ல் பணி நிறைவு - வாழ்த்துகள்

வாழ்த்துகிறோம் !

30-06-2013 அன்று இலாக்காப் பணியிலிருந்து ஓய்வு பெறும்  தோழர்கள்

தேசியச் சங்கத்தின்
மாநிலத் துணைத் தலைவர்

S.குருவன், TM / காரைக்குடி

தேசியச் சங்கத்தின்
முன்னாள் மாவட்டச் செயலர்

M.கணபதி, SDE/சிவகங்கை

மற்றும்
P.நயினான், Sr.TOA(P)/ பரமக்குடி
S.துரைப்பாண்டியன், TM/KKD
A.சேகரன், TM / தினைக்குளம்
P.ராமசாமி, TM / பரமக்குடி

ஆகியோரது பணி நிறைவுக் காலம் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாக அமைய மாவட்டச் சங்கம் மனதார வாழ்த்துகிறது.

30/06/2013                          FNTO/KKD.SSA