FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Sunday, January 6, 2013

Com. O.P.Gupta passes away - தோழர் ஓம் பிரகாஷ் குப்தா மறைவு

Veteran Leader of P & T Trade Union Movement Sri Om Prakash Gupta passed away tonight at New Delhi.

FNTO Tamil Nadu Circle Union conveys its heartfelt condolences.

FNTO flags will fly at half mast on Monday, the 07/01/2013 in token of respect to the departed leader.

அஞ்சல் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் ஓம் பிரகாஷ் குப்தா இன்றிரவு புதுடில்லியில் காலமானார்.

FNTO தமிழ் மாநிலச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக FNTO சங்கக்  கொடி 07/01/2013 திங்கட்கிழமை அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படும்.

Saturday, January 5, 2013

BSNL VISHISHT SANCHAR SEVA PADAK AWARD FOR 2012


BSNL VISHISHT SANCHAR SEVA PADAK AWARD FOR 2012

Sri G.Muthukumaran working as an Accounts Officer in the office of the General Manager, BSNL, Karaikudi is conferred with the State level “Vishisht Sanchar Seva Padak Award” for the year 2012 in recognition of his continuous meritorious performance. The award comprise of Rs.21000 in cash, 50 grams Silver Medal, Citation and a Certificate.

The award was presented on the new year day in a special meeting held at Karaikudi which was presided over by the General Manager of BSNL. Sri A.Swaminathan, Assistant General Manager (Admin) welcomed the gathering. Sri K.S.Venkatasubramanian, General Manager presented the award and praised the awardee for his outstanding performance . Sri S.Ramakrishnan, Dy.General Manager (Finance) read out the citation and gave away the Silvar Medal. Sri S.Jeyachandran,  Dy.General Manager (Admin) and Smt.D.Rajammal, Dy.General Manager (Planning) also spoke on the occasion and congratulated the awardee. Sri D.Kumaraguru, Sub-Divisional Engineer (Admin) gave vote of thanks. A large number of officers and staff of BSNL attended the special meeting.

The State level “Vishisht Sanchar Seva Padak Award” for the year 2012 was conferred to 6 officers and 11 officials of Tamil Nadu Telecom. Circle among whom Sri G.Muthukumaran is the only officer awarded in Karaikudi Telecom. District.

காரைக்குடி பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றும் திரு கோ.முத்துக்குமரனுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக 2012-ஆம் ஆண்டுக்கான தமிழ் மாநில அளவிலான பி.எஸ்.என்.எல். விஷிஷ்ட் சன்சார் சேவா பதக் விருது வழங்கப் பட்டது. இந்த விருதானது 21 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, 50 கிராம் வெள்ளிப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

புத்தாண்டு தினத்தன்று பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் திரு கே.எஸ்.வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் காரைக்குடியில் நடைபெற்ற விழாவின் போது மேற்படி விருது வழங்கப் பட்டது. உதவிப் பொது மேலாளர் (நிர்வாகம்) திரு .சுவாமிநாதன் வரவேற்புரையாற்ற, பொது மேலாளர் விருதை வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார். துனைப் பொது மேலாளர் (நிதி) திரு எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டுப் பத்திரம் வாசித்து, பதக்கத்தை அணிவித்தார். துனைப் பொது மேலாளர் (நிர்வாகம்) திரு எஸ்.ஜெயச்சந்திரன் மற்றும் துனைப் பொது மேலாளர் (திட்டம்) திருமதி D.ராஜம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, விருது பெற்ற முத்துக்குமரன் ஏற்புரை நிகழ்த்தினார். துனைக் கோட்டப் பொறியாளர் (நிர்வாகம்) திரு D.குமரகுரு நன்றி நவில, அதிகாரிகளும் தொழிலாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தமிழ் மாநில அளவில் 6 அதிகாரிகளுக்கும் 11 ஊழியர்களுக்கும் 2012-ஆம் ஆண்டுக்கான பி.எஸ்.என்.எல். விஷிஷ்ட் சன்சார் சேவா பதக் விருது வழங்கப் பட்டதில் காரைக்குடி தொலைத் தொடர்பு மாவட்டத்தில் ஒரு அதிகாரிக்கு இந்த விருது கிடைத்துள்ளது.