Friday, July 20, 2012
Mobile Banking
State owned telecom operator, BSNL, has partnered with State Bank of India (SBI) to launch its mobile baking services via the ubiquitous USSD (unstructured supplementary service data) mobile platform, reports Telecomtalk. It is not clear as to which company is providing the technology support for the service.
Thursday, June 7, 2012
தர்ணா மற்றும் வேலைநிறுத்தம் - FNTO-வின் கோரிக்கைகள்
FNTO-வின் போராட்ட அறைகூவல்
06-06-2012 : தர்ணா போராட்டம்
13-06-2012
: ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்கோரிக்கைகள்
1.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சிரமமும், நிர்வாகத்துக்கு அதிகபட்ச
நன்மையும் அளிக்கக் கூடிய வகையில் “மாற்றல் கொள்கை”யைத் திருத்தியமைத்தல்.
2.
அனைத்து கேடர்களும் பயன்பெறும் வகையில் பதவியுயர்வுத் திட்டத்தை
(NEPP) மாற்றியமைத்தல்.
3.
DPE வழிகாட்டுதல்படி 1-1-2007 முதல் 78.2% அகவிலைப் படியை இணைத்து
ஊதியத்தைத் திருத்தியமைத்தல். தொடர்ந்து, இதர படிகளையும் மாற்றியமைத்தல்.
4.
அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி Sr.TOA-களுக்கு EDP திட்டத்தை
அமல்படுத்தல்.
5.
DOT/DOPT அறிவுரைப்படி Senior Accountant-களுக்கு 2-வது ACP
திரும்பக் கொடுத்தல்.
6.
ஆறாவது ஊதியக்குழுவில் Postman-களுக்கு உயர் ஊதியம் வழங்கப்
பட்டதைத் தொடர்ந்து, Lineman-களுக்கும் Postman-களுக்கு இணையாக ஊதியத்தை மாற்றியமைத்து,
Telecom. Mechanic-களுக்கு உயர் ஊதியம் வழங்கல்.
7.
NEPP பதவியுயர்வுத்
திட்டத்தில் TTA-களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைதல். அதாவது, 1-10-2000 முதல் TTA-களுக்கு வழங்கப்பட்ட
உயர் ஊதிய மாற்றத்தை NEPP திட்டத்தின் கீழ் முதல் பதவியுயர்வாகக் கருதக் கூறும் உத்தரவை
ரத்து செய்தல்.
8.
2007-க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட TTA-களுக்கும் அதிகாரிகளுக்கு
இணையாக 30% ஊதிய நிர்ணயப் பலன்களைத் தருதல்.
9.
முதல் ஊதிய மாற்றத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை (Pay anomaly)
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி FR-ல் உள்ள விதிகளின் அடிப்படையில் களைதல்.
10.
இரண்டாவது ஊதிய மாற்றத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை (Pay
anomaly) களைய, ஆண்டு ஊதிய உயர்வை முன்தேதியிட்டு (stepping up) வழங்குதல்.
11.
2007-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் 78.2% அகவிலைப் படியை
இணைத்து ஓய்வூதியத்தைத் திருத்தியமைத்தல்.
12.
கருணை அடிப்படை நியமனங்களுக்கான அதிகாரத்தை மீண்டும் CGM-களுக்கு
வழங்கல்.
13.
Sr.TOA மற்றும் TTA-க்கள் பதவியுயர்வு பெற JTO போட்டித் தேர்வை
உடனே நடத்துதல்.
14.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து Telecom. Mechanic-களும்
TTA 40% தேர்வு எழுத அனுமதித்தல்.
15.
Telecom. Mechanic காலிப் பணியிடங்களில் RM மற்றும் GR-D-களை
நியமித்தல்.
16.
செயல்திறனை அதிகரிக்கும் விதத்திலும் ஊழலைத் தடுக்கும் விதத்திலும்,
பராமரிப்புப் பணிகளுக்கு காண்ட்ராக்ட் முறையை ஒழித்துவிட்டு, ACE-3 பில் முறையை மீண்டும்
செயல்படுத்துதல்.
17.
முன்தேதியிட்டு NE-12 ஊதிய விகிதத்துக்கு உடனடியாக உத்தரவு வெளியிடுதல்.
18.
சிவில் பகுதி ஊழியர்களுக்கு ஆளெடுப்பு விதிகளை மாற்றி,
கேடர் சீரமைப்பை அமல்படுத்தல்.
19.
VRS திட்டத்தைக் கட்டாயமாக்காமல், பயனளிக்கும் வகையில் பேசித்
தீர்த்தல்.
20.
Medical Allowance, Leave Encashment, LTC ஆகியவற்றை மீண்டும்
வழங்கல்.
21.
GSM, தொலைபேசிக் கருவிகள், மோடம், கேபிள், OFC மற்றும் பராமரிப்புப்
பணிகளுக்குத் தேவையான இதர உபகரணங்களையும் தாமதமின்றிக் கொள்முதல் செய்தல்.
22.
தேசியச் சங்கத்துக்கு அங்கீகாரம் / குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகளை
வழங்குதல்.
Saturday, May 5, 2012
Wednesday, May 2, 2012
தமிழ் மாநிலச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்
மாநிலத் தலைவர் : தோழர் M.அப்துல் வஹாப், CSS, திருச்சி
மாநில செயல் தலைவர் : தோழர் T.பிளோமின் ராஜ், TM, கோவை
மாநில துணைத் தலைவர்கள் : தோழர் S.குருவன், TM, காரைக்குடி
தோழர் K.செல்லதுரை, TM, தூத்துக்குடி
தோழர் M.பூபதி, TM, கரூர்
தோழர் D.இராமலிங்கம், STS, விழுப்புரம்
தோழர் A.இராமமூர்த்தி, TM, தஞ்சாவூர்
மாநிலச் செயலாளர் : தோழர் D.சந்திரசேகரன், SA, வேலூர்
மாநில இணைச் செயலாளர் : தோழர் S.சதாசிவம், SSS, புதுச்சேரி
மாநில உதவிச் செயலாளர்கள் : தோழர் V.மோகன்குமார்,
SSS, CGM Office, சென்னை
தோழர் K.கருப்பசாமி, TTA சங்கரன்கோவில்
தோழர் K.வரதராஜன், CTS, ஈரோடு
தோழர் M.தேவராஜன், STS,பெரம்பலூர்
தோழர் P.கோவிந்தன், Sr.TOA,தர்மபுரி
தோழர் S.K.தீனதயாளன், CTS, மதுரை
தோழர் K.தனபதி, TS(O), திருப்பூர்
தோழர் K.இராமையா, STS, சிதம்பரம்
தோழர் G.அச்சுதானந்த், Sr.TOA, நாகர்கோவில்
தோழர் S.கிருஷ்ணமூர்த்தி, TM சிவகங்கை
மாநிலப் பொருளாளர் : தோழர் N.நீதிநாதன், சிவில் பகுதி,
சென்னை
மாநில உதவிப் பொருளாளர் : தோழர் S.பார்த்திபன், Sr.TOA, CGM Office, சென்னை
மாநில அமைப்புச் செயலாளர்கள்: தோழியர் R.சங்கரி
தேவி, TM, திருவண்ணாமலை
தோழர் A.மனோகரன், TM, மதுரை
தோழர் J.அனந்தகிருஷ்ணன், TSO, சேலம்
தோழர் S.ராஜமன்னார், SSS, அருப்புக்கோட்டை
தோழர் N.குமார், TM, மண்டபம்
பப்ளிகேஷன் செயலாளர் : தோழர் N.K.சாயிராம், CSS, CGM Office, சென்னை
Tuesday, May 1, 2012
மே – 1 : உழைப்பாளர் தினம்
உழைப்பின் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும்
தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூகப்
பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாகவும் மே தினம் உலகமெங்கும் கொண்டாடப் படுகிறது. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற
தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்களே தொழிலாளர் தினம் கொண்டாடப் படுவதற்கான
அடிப்படையாக அமைந்தன.
தொழிலாளர் தினமானது, இங்கிலாந்து
போன்ற நாடுகளில் மே மாதத்தின் முதல் திங்கள்கிழமையும் வேறு சில நாடுகளில் செப்டம்பர்
மாதத்தின் முதல் திங்கள்கிழமையும் கொண்டாடப் பட்டாலும், பெரும்பாலான
நாடுகளில் மே மாதத்தின் முதல் நாளன்றே கொண்டாடப் படுகிறது. இந்தியாவில்
சென்னையில் தான் முதன்முதலில் 1923-ல் மெரீனா கடற்கரையில் தொழிலாளர்
தினம் கொண்டாடப் பட்டது. அதன் நினைவாகவே சென்னை கடற்கரையில்
உழைப்பாளர் சிலை நிறுவப் பட்டுள்ளது.
போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாகத் தொழிலாளர்கள் இழந்துவரும்
இன்றைய சூழலில், அவற்றை வென்றெடுப்பதற்கான உரிமக்குரல் இன்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டேதான்
இருக்கும்.
கடமையைச் செய்வோம்! உரிமைக்காகப் போராடுவோம்!!
அனைத்துத் தொழிலாளர்களுக்கும்
தொழிலாளர் தின நல் வாழ்த்துகள்.
Subscribe to:
Posts (Atom)








