Friday, October 11, 2013

தோழர் A.நார்மன் மறைந்தார்

அண்ணாச்சி என்று நம்மால் அன்போடு அழைக்கப்பட்டவரும்,
கண்டிப்புடன் சங்கத்தைக் கட்டிக்காத்து வழிநடத்தியவரும்,
மாவட்டச் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து –
மாநிலத் துணைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,
எண்ணற்ற மஸ்தூர் தோழர்களின் வாழ்வை மலரச் செய்தவரும்,
ஏழைத் தோழர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றவரும்,
நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டவருமான
தேசியச் சங்கத்தின் சிங்கநிகர் தோழர் நார்மன்
இன்று அதிகாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
எழுபத்தெட்டு வயதான தோழர் நார்மன் அவர்கள்
பெங்களூரில் தனது ஒரே மகனுடன் வசித்து வந்தார்.
மறைந்த நமது அருமைத் தலைவருக்கு - கொடிதாழ்த்தி

கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.

No comments:

Post a Comment