Saturday, June 3, 2017

குருஜி கனகசொரூபன் மறைவுக்கு அஞ்சலி

அஞ்சல் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், அனைவராலும் குருஜி என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான கடலூர் தோழர் கனக சொரூபன் 01/06/2017 காலை இயற்கை எய்தினார். அன்னாரது நல்லடக்கம் 02/06/2017 அன்று கடலூரில் நடைபெற்றது.

ஆரம்பத்தில் ஒன்றுபட்ட NFPTE  இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய குருஜி, பிறகு  FNPTO இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்கி, அரும்பாடுபட்டு வளர்த்து, செம்மையாக வழிநடத்தினார். தனது உறுதியான செயல்பாடுகளால் PTTI-ன் கவனத்தை ஈர்த்த குருஜி, தேசியச் சங்கத்தின் தமிழ் மாநில, அகில இந்திய மாநாடுகளில் “கிங் மேக்கர்” ஆகவும் விளங்கினார்.

குருஜியின் மறைவுக்கு தமிழ் மாநிலச் சங்கம் கொடிதாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது.