Monday, July 1, 2013

தோழர் S.குருவன் பணி நிறைவு - 30/06/2013

வாழ்த்திடுவோம் – Give a big hand
விசயமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்
விதிவசத்தால் காணாமல் போனபோது
இடைவெளியை நிரப்ப வந்த இந்திரரும்
அறிவொளியைத் தேடிப் போனதாலே
E-4 காரைக்குடி மாவட்டச் சங்கம்
இக்கட்டிலே சிக்கித் தவித்தபோது,
இதோ ”நான் இருக்கிறேன்” என்று
ஆபத்பாந்தவனாக அனாதரட்சகனாக
எங்கிருந்தோ அல்லஇங்கிருந்தே வந்து
மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்று
திறம்படச் சங்கப் பணியாற்றியதாலே
மாநிலத் துனைத் தலைவராக உயர்ந்து
தொழிலாளர்க்காக உழைத்திட்ட தோழர்
குருவன் இன்று பணிநிறைவு பெறுகின்றார்.
சிறக்கட்டும் அவர்தம் பணிஓய்வுக் காலம்

சிவக்கட்டும் நம்கைகள் கரவொலியாலே !

No comments:

Post a Comment