Monday, January 16, 2012

இனிய பொங்கல் வாழ்த்துகள் - Happy Pongal



இஞ்சியுடன் மஞ்சளும் இனிதான செங்கரும்பும்
விஞ்சி மிகச்சிறந்து விளைந்திட்ட செந்நெல்லும்
அறுவடை செய்திங்கு அகமகிழும் உழவர்
ஆதி கதிரவனை அருமைக் கால்நடையை
வணங்கி மிகப்பணிந்து வாழ்த்திப் பொங்கலிட்டு
தம்நன்றி தெரிவிக்கும் அறுவடைப் பெருநாளில்
தரணியெல்லாம் கொண்டாடும் தமிழர் திருநாளில்
பொங்குக மங்களம் எங்கணும் பூமியில்
தங்குக மகிழ்ச்சியும் மனநிறைவும் தங்களில்
என்றுமிக அன்போடும் ஆசைகள் பலவோடும்
உள்ளங் கனிந்துமிக வாழ்த்துகிறேன் உங்களையே !

அனைவருக்கும்
NUBSNLW - FNTO தமிழ் மாநிலச் சங்கத்தின்
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் !!

No comments:

Post a Comment