Thursday, December 15, 2011

ஓய்வு வயது 58 ஆக குறைப்பு – FNTO எதிர்ப்பு


      VRS  திட்டத்துக்கு மாற்றாக, ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து      58 ஆகக்  குறைப்பதற்கான யோசனையை முன்வைத்து ஒரு சாரார் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையில் இறங்கி யிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. ஓய்வு பெறும் வயதைக்  குறைப்பதென்பது 58 வயதில் ஊழியர்கள் அனைவரையும் கட்டாய ஓய்வில் அனுப்புவது என்பதைத் தவிர வேறில்லை. மேலும், அனைத்து ஊழியர்களின் பொதுவான மனோபாவமும் அது போன்ற ஒரு திட்டத்துக்கு எதிரானதாகவே இருக்குமென்பதும் நிர்வாகத்திற்கு தெரிந்திருக்கும்.

தொழிலாளர்கள் மீது விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் திணிக்காமல், விருப்ப ஓய்வில் செல்ல முன்வரும் தொழிலாளர்களுக்கு அதிகபட்ச பயன்தரக் கூடிய நல்லதொரு திட்டத்தை வழங்க நிர்வாகம் முன்வரும் போது அதை தேவையின்றி எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்ற FNTO-வின் நிலையை ஏற்கனவே தெளிவு படுத்தியிருக்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில், குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட சுயலாப நோக்கங்களுக்கு அடிபணிந்து, ஓய்வு பெறும் வயதைக்  குறைப்பதென்னும் முடிவை நிர்வாகம் எடுத்தால், அதை நாங்கள் முழுமையாக எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக இதுபோன்ற ஓய்வு வயதைக்  குறைக்கும் முயற்சிகளில் நிர்வாகம் இறங்காதென்று நம்புகிறோம்.

No comments:

Post a Comment