Saturday, February 20, 2010

ஜெயிக்கப் போவது யாரு?

நமது டெலிகாம் துறையிலே, குறிப்பாக, ஜிஎஸ்எம் பகுதியில்,  நீண்ட காலமாக இருப்பவர்களுக்கும் புதிதாக நுழைபவர்களுக்கும் இருக்கும் கடுமையான போட்டிகளை விரிவாக ஆராய்ந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் முடிவு:--
          போட்டி போட்டுக் கொண்டு வினாடிக்கு ஒரு பைசா, எஸ்எம்எஸ் இலவசம் என்றெல்லாம் வரும் அறிவிப்புகளால் துவக்கத்தில் மக்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறினாலும், இறுதியில் சேவைத் தரம் எங்கு நன்றாக இருக்கிறதோ அங்கேயே இருக்க விரும்புகிறார்கள். கட்டணங்கள் சற்றுக் கூட இருந்தாலும் தடையற்ற நெட்வொர்க், புகார்களுக்கு உடனடி தீர்வு, பில்லிங் தெளிவாக  இருத்தல் போன்றவற்றையே வாடிக்கையாளர்கள் முக்கியமாக நினைத்து அதற்கேற்ற நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
     இப்படி ஒரு அறிக்கை சொல்கிறது. இன்னொரு அறிக்கையும் வெளியாகியுள்ளது. நீல்சன் ஒன்ற ஒரு பெரிய ஆய்வு (survey) நிறுவனம். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் சேவைத்தரம் வாரியாக முதலிடத்திலுள்ள நிறுவனங்கள் எவை என மாநில வாரியாகப் பட்டியலிட்டுள்ளது. அதில் நமது பிஎஸ்என்எல், கர்னாடகம், பஞ்சாப்  மாநிலங்களில் மட்டும் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரியது.  அந்த இரு மாநிலங்களிலும்கூட நம்முடன் தனியார்கள் சரிக்குச் சரி நிற்கிறார்கள் என்பதும் கவனித்தலுக்குரியது.
Snap_2010.02.20 06.45.43_001  ஆக தரமான சேவையே இறுதி வெற்றி பெறச் செய்யும் என்ற முதல் அறிக்கையின் அடிப்படையில் நமது நிறுவனத்தை வெற்றிப் பாதையில் செலுத்த நாம் என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment